இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.22 மணி வரை....

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

அக்டோபர் 3- இரவு 11.15 மணி:

இந்தியன் ஏர்லைன்சின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-சிடி-7444 என்றவிமானம் மும்பையில் இருந்து டெல்லி புறப்படுகிறது. விமானத்தில் 46 பயணிகளும் 4 விமானப் பணியாளர்கள் உள்ளனர்.

விமானத்தை பைலட் கேப்டன் அஸ்வின் இயக்குகிறார். அவருடன் துணை விமானியும் உள்ளார்.

11.30 மணி: அகமதாபாத் விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அனாமதேய தொலைபேசி அழைப்பு வருகிறது. பேசியநபர் மும்பை-டெல்லி விமானம் கடத்தப்பட உள்ளதாக கூறிவிட்டு போனை வைத்துவிடுகிறார்.

11.32 மணி: அகமதாபாத் விமான நிலையக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானத்தைத் தொடர்பு கொண்டு பைலட்டிடம்பேசுகின்றனர். விமானத்தில் பயணிகள் அறையில் கடத்தல்காரர்கள் இருப்பதால் அவர்கள் விமானிகள் அறையில்நுழைந்துவிடாமல் தடுக்க உடனடியாக காக்பிட் கதவை மூடிவிடும்படி அறிவுறுத்துகின்றனர்.

11.33 மணி: இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களுக்கும் விமானம் கடத்தப்பட்ட தகவல் தெரிவிக்கப்படுகிறது.குறிப்பாக லக்னொ, டெல்லி விமான நிலையங்கள் அவரச நிலைக்குத் தயாராகின்றன.

அக்டோபர் 4- நள்ளிரவு 12.52 மணி:

டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குகிறது. முக்கிய ரன்வேயின் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.ஒதுக்குப்புறமான 27வது ரன்வேயில் மட்டும் விளக்குகள் போடப்பட்டு அங்கு விமானத்தை தரையிறக்க வைக்கின்றனர்அதிகாரிகள்.

12.57 மணி: தேசிய பாதுகாப்புப் படையின் கமாண்டோக்கள் விமானத்தை சுற்றி வளைக்கின்றனர். விமானத்தை வழி மறித்துஅதை ஒட்டியவண்ணம் லாரி நிறுத்தப்படுகிறது.

1.15 மணி: விமானம் கடத்தப்பட்டதாக செய்தி நிறுவனங்களுக்கு தகவல் கிடைக்கிறது.

1.21 மணி: விமானம் கடத்தப்பட்டதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷானவாஸ் ஹூசைன் உறுதி செய்கிறார்.

1.50 மணி: அவரசகால நிர்வாகக் குழு உடனடியாக கூடுகிறது. விமானத்துறையின் தலைமை அலுவலகத்தில் விமானத்துறைஅமைச்சர், உயர் அதிகாரிகள் கூடுகின்றனர்.

2.15 மணி: விமானத்தில் 2 கடத்தல்காரர்கள் இருப்பதாக விமானத்துறை செயலாளர் ஜங் நிருபர்களிடம் கூறுகிறார்.கடத்தல்காரர்கள் ஆங்கிலத்தில் தட்டுத்தடுமாறி பேசுவதாக தகவல் கிடைத்துள்ளது என்கிறார்.

2.20 மணி: உள்துறை அமைச்சர் அத்வானியும் விமானத்துறை தலைமை அலுவலகம் வருகிறார். பாதுகாப்புத்துறை, உள்துறை,விமானத்துறை, போலீஸ், உளவுத்துறை அதிகாரிகளுடன் உடனடியாக ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

2.30 மணி: விமான நிலையத்தில் பெரும் குழப்பம் நிலவுகிறது. பயணிகள் உறவினர்கள் குவிய ஆரம்பிக்கின்றனர். நிருபர்களும்குவிகின்றனர். பல நிருபர்கள் பயணிகளின் செல்போன் நம்பர்களை கண்டுபிடித்து அவர்களுடன் செல்போன்களில் பேசுகின்றனர்.விமானத்தின் கதவைத் திறப்பதில் பிரச்சனை உள்ளதாகவும், விமானித்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தங்களிடம்விமானப் பணியாளர்கள் கூறியதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். ஒருவேளை விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறிய அவர்கள்கடத்தல்காரர்கள் யாரும் தங்கள் பகுதியில் இல்லை என்கின்றனர். ஒருவேளை விமானிகள் அறையில் கடத்தல்காரர்கள்இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

அதிகாலை 4.00 மணி: விமானி கேப்டன் அஸ்வினுடன் அமைச்சர் அத்வானி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில்இருந்தவண்ணம் பேசுகிறார்.

4.05 மணி: விமானத்தில் நுழைய கமாண்டோக்களுக்கு உத்தரவு பறக்கிறது. உடனடியாக காக்பிட் பகுதிக்குள் அதிரடியாகநுழைகின்றனர் கமாண்டோக்கள். பயணிகள் பகுதியிலும் நுழைகின்றனர். கடத்தல்காரர்கள் யாரும் இல்லை என்று தெரியவருகிறது.

4.10 மணி: தவறான செய்தியால் பரவிய புரளி என்று தெரிய வருகிறது. அரசே நடத்திய கடத்தல் ஒத்திகை என்ற செய்தியைமத்திய அமைச்சர் ஹூசைன் மறுக்கிறார்.

4.12 மணி: முதல் பயணி விமானத்திலிருந்து இறங்குகிறார்.

4.22 மணி: எல்லா பயணிகளும் பத்திரமாக இறங்குகின்றனர். கடத்தல் நாடகம் முடிவுக்கு வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற