கிரிக்கெட்: இந்தியா- தென்ஆப்ரிக்கா இன்று மோதல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜோகன்ஸ்பெர்க்:

இந்தியா, தென் ஆப்ரிக்கா மற்றும் கென்யா ஆகிய 3 ாநடுகள் பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர்இன்று ஆரம்பமாகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியாவும், தென்ஆப்ரிக்காவும் மோதுகின்றன.

இந்திய அணி தற்போது தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்தியா, தென் ஆப்ரிக்காமற்றும் கென்யா ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று ஆரம்பமாகிறது.

இந்தப்போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 3 முறை மோதவேண்டும். இறுதியில் முதல் 2இடங்களைப் பிடிக்கும அணிகள் இறுதியிப் போட்டியில் பங்கேற்கும். இந்த ஒரு நாள் ஆட்டம் வரும் 27ம் தேதிவரை நடைபெறுகிறது.

இந்திய அணியில் தற்போது டெண்டுல்கர், கும்ளே ஆகியோர் இடம்பெற்றிருப்பது அணியின் வெற்றிக்குபக்கபலமாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புள்ளது.

இன்றைய ஆட்டம் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு போட்டிதுவங்குகிறது. இந்த ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவியில் காணலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற