For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முத்துக்கருப்பன் மாற்றம் ஏன்? பின்னணித் தகவல்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் கே. முத்துக்கருப்பன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிரடியாக இடமாற்றம்செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தற்போது அதிரடிப்படை ஐ.ஜி.யாக இருந்து வரும் விஜயகுமார்நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் தமிழகத்தில் அதிமுக அரசு பதவியேற்றதும், சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டவர்முத்துக்கருப்பன். அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெருமளவு பெற்றிருந்த அவர்பதவியேற்ற பிறகு பல விரும்பத்தகாத சம்பவங்கள் சென்னையில் நடந்தேறின.

கட்டப் பஞ்சாயத்து:

திமுக தலைவர் கருணாநிதி அதிரடியாக கைது செய்யப்பட்டது, அதைக் கண்டித்து ஆகஸ்டு மாதம் 12ம் தேதி திமுக நடத்திய பேரணியில் போலீஸார்கண்மூடித்தனமாக தாக்கப்பட்டது, பத்திரிக்கை நிருபர்கள் மீதான தாக்குதல் என்று அடுத்துடுத்து சென்னையில் சம்பவங்கள் நடந்தேறின.

இந்த சம்பவங்கள் ஜெயலலிதாவுக்கு அதிருப்தியைக் கொடுத்தன. மேலும், கட்டப்பஞ்சாயத்து நடத்தி பல பிரச்சினைகளை முத்துக்கருப்பன் தீர்த்துவைப்பதாகவும் ஜெயலலிதாவுக்கு தகவல்கள் வந்தன.

சரவணபவன் ராஜகோபாலுக்கு ஆதரவு:

மேலும், ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் விவகாரத்தில், அவருக்கு சாதகமாக முத்துக்கருப்பன் நடக்கிறார் என்ற தகவலும்ஜெயலலிதாவுக்குப் போயுள்ளது.

வழக்கில் சிக்காமல் தப்ப ராஜகோபாலிடம் போலீசார் ரூ. 3 கோடி வரை பேரம் பேசியதாக புகார் எழுந்தது. இதிலும் முத்துக்கருப்பனின் பெயர்அரசல்புரசலாக அடிபட்டது.

இதையடுத்து அவரை ஜெயலலிதாவே அழைத்து டோஸ் விட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் பிறகு தான் ஜீவஜோதி கொடுத்த புகார் ஏற்கப்பட்டுகடகடவென விசாரணை நடந்தது.

மாணவர்கள் மீது தாக்குதல்:

இதற்கெல்லாம் உச்சகட்டமாக சமீபத்தில் சென்னை சட்டக் கல்லூரி மாணவர் விடுதிக்குள் போலீஸார் புகுந்துகண்மூடித்தனமாக நடத்திய தாக்குதல்தான் முத்துக்கருப்பனை இடமாற்றம் செய்வதற்கு முக்கிய காரணமாகஅமைந்துவிட்டது.

இதையடுத்து முத்துக்கருப்பனை இடமாற்றம் செய்வது என்று ஜெயலலிதா முடிவு செய்தார். அதன்படி அவர்இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போது மிகவும் சாதாரணமான பதவிக்கு, அதாவது, திருச்சி ஆயுதப் படை ஐ.ஜியாகநியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, முத்துக்கருப்பனை மத்திய அமைச்சரவைப் பணிக்கு அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டும், அவரை அனுப்ப முடியாது என்று தமிழக அரசு பிடிவாதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X