For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவில் வங்கியை ஏமாற்றிய 4 இந்தியர்கள்

By Staff
Google Oneindia Tamil News

நியூயார்க்:

அமெரிக்காவில் உள்ள ஒரு வங்கியை ஏமாற்றி ரூ.2,960 கோடி வரை சுருட்டியதாக 4 இந்தியர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நரேந்திர குமார் ரஸ்டோகி (47), மனோஜ் (43), அனில் ஆனந்த் (39), உதய்சங்கர் (27) ஆகிய நால்வரும்அமெரிக்காவின் நியூஜெர்ஸி நகரில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் சர்வதேச அளவில் உலோகப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த 4 இந்தியர்களும் முழுக்க முழுக்க வங்கிகள் மூலமாகத்தான் தங்களுடைய வியாபாரத்தை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு வங்கியில் இவர்கள் ரூ.2,960 கோடி வரை சுருட்டியிருப்பதாகஅமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.

இதையடுத்து இந்த 4 இந்தியர்கள் மீதும் மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இவர்களுடைய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X