For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சைதை: 58 வாக்கு சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சர்ச்சைகள் நிறைந்த சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள 58 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்ததேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இதற்காக மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழக போலீசாரை நம்பிப் பயனில்லை என்பதால்மத்திய ரிசர்வ் போலீசாரை நிறுத்தி தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

சைதாப்பேட்டையில் கடந்த 31ம் தேதி நடந்த தேர்தலில் அதிமுகவினர் பெரும் முறைகேடுகளில் ஈடுபட்டனர்.ஏராளமான போலி சான்றிதழ்களைக் காட்டி அதிமுகவினர் கள்ள ஓட்டு போட்டனர். அதே போல திமுக தேர்தல்ஏஜெண்டுகளை அடித்து விரட்டினர்.

இதையடுத்து அங்கு மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் புகார்கொடுத்திருந்தன.

திமுகவும் பாமகவும் டெல்லியில் கடந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தின. இதையடுத்து தேர்தல் கமிஷன்சார்பில் பூர்ஜியா மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இந்தப் புகார்கள் குறித்து விசாரணைநடத்தினர்.

கடந்த மூன்று நாட்களாக இந்த விசாரணை நடந்தது. பின்னர் நேற்று பிற்பகல் தலைமைத் தேர்தல் கமிஷனுக்குபேக்ஸ் மூலம் அறிக்கை அனுப்பப்பட்டது.

இதையடுத்து மாலை தேர்தல் கமிஷன் தனது முடிவை அறிவித்தது. அதன்படி சைதாப்பேட்டை தொகுதிக்குஉட்பட்ட 58 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் 7ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் தேர்தல் கமிஷன்கூறியுள்ளது.

வாக்குச் சாவடிக்குள் வீடியோ படம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்து விட்டது.விதிமுறையில் அதற்கு இடம் இல்லை என்று காரணம் கூறப்பட்டுள்ளது.

மறு வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகள்:

கோட்டூர்புரம், வி.எஸ்.எம். கார்டன், அன்னபூரணி பள்ளி, ஐ.ஐ.டி வளாகம், மாதிரி உயர் நிலைப் பள்ளி,சின்னமலை, ஆலந்தூர் சாலை போலீஸ் லைன், மேற்கு சிஐடி நகர், லேபர் காலனி, அன்னை வேளாங்கண்ணிபள்ளி, மேட்டுப்பாளையம் மாநகராட்சிப் பள்ளி, மேற்கு மாம்பலம் ஆகிய பகுதிகள்.

மறு தேர்தல் முடியும் வரை அந்த வாக்குச் சாவடிகளில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் என்றுதேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மறு வாக்குப்பதிவைக் கண்காணிக்க 5 பேர் கொண்ட பார்வையாளர் குழுநியமிக்கப்பட்டுள்ளது.

முறைகேடுகள் குறித்த புகார்களை விசாரித்த பூர்ஜியா மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோர் தவிர சாரதா பிரசாத்,சரஸ்வதி பிரசாத் மற்றும் ரமேஷ் குமார் சிங்க்லா ஆகியோரும் தேர்தல் பார்வையாளர்களாக இருப்பார்கள்.

சைதாப்பேட்டையில் நாளை நடக்கவுள்ள 58 வாக்குச் சாவடிகளில் நடக்கவுள்ள மறுதேர்தலையொட்டி அங்கு மிகபலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

ஜாதிச் சான்றிதழுக்கு தடை:

இதையடுத்து நாளை இந்த 58 வாக்குச் சாவடிகளிலும் மறு தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலையொட்டி தேர்தல்கமிஷன் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மாநில போலீசை நம்பிப் பயனில்லை என்பதால் மத்தியப்படையினர் மேற்பார்வையில் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து தமிழக தேர்தல் ஆணையர் மிருத்யுஞ்சய் சாரங்கி நிருபர்களிடம் கூறுகையில்,

மறு வாக்குப் பதிவின்போது ஜாதிச் சான்றிதழைக் காட்டி ஓட்டு போட முடியாது. தேர்தல் அடையாள அட்டை,கிராம நிர்வாகியின் சான்றிதழ், வங்கிக் கணக்குப் புத்தகம் உள்ளிட்ட தேர்தல் கமிஷன் அங்கீகரித்த 18அடையாளங்களில் ஒன்றைக் காட்டித் தான் வாக்களிக்க முடியும்.

இந்த 58 வாக்குச் சாவடிகளும் 30 கட்டடங்களில் அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு கட்டடத்திலும் 25 மத்தியரிசர்வ் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 58 வாக்குச் சாவடிகளிலும் மொத்தம் 850 மத்தியரிசர்வ் போலீசார் காவலில் இருப்பர்.

அமைச்சர்களுக்கும் தடை:

அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள், பத்திரிக்கை புகைப்பட கலைஞர்கள் உள்பட யாரும் வாக்குச்சாவடிக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒவ்வொரு வேட்பாளரும் புதிய பூத் ஏஜெண்டை நியமிக்கவேண்டும்.

வாக்குப்பதிவை முன்னிட்டு இன்று மாலை முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து முடியும் வரை சென்னை நகரில்அனைத்து மதுபானக் கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

வாக்குப் பதிவு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் என்றார் சாரங்கி.

இந்த மறுதேர்தல் வெறும் கண்துடைப்பு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்துத் தெரிவித்துள்ளது.சைதாப்பேட்டையில் இந்தக் கட்சி தனித்துப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இன்று தொடங்கிய அக் கட்சியின்மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் இந்த மறு தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X