For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்கிரஸ்- த.மா.கா. ஜூலை 15ம் தேதி இணைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காங்கிரஸ்- தமிழ் மாநில காங்கிரஸ் இணைப்பு குறித்து இறுதிச் சுற்றுப் பேச்சு நாளை டெல்லியில் நடக்கிறது.இணைப்புக்கான நாளும் நாளையே அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை ஜி.கே. மூப்பனார் காலத்தில் தொடங்கியது. அவரது மறைவையடுத்துவாசன் தலைவரான பின்னர் பேச்சுவார்த்தை மும்முரமடைந்தது.

தன் தந்தையை நம்பி காங்கிரஸை விட்டுவிட்டு வந்த தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மீண்டும் காங்கிரசில்உரிய பதவிகள் பெற்றுத் தர கடும் முயற்சி எடுத்தார் வாசன்.

பல நெருக்குதல்களையும் மீறி காங்கிரசிடம் சரணடைந்துவிடாமல் தனது கட்சியினருக்கு உரிய பதவிகளைத்தருமாறு காங்கிரஸை வலியுறுத்தி வந்தார்.

தமிழக காங்கிரஸ் விவகாரத்தை கவனித்து வரும் மேலிடப் பார்வையாளர்களான ரமேஷ் சென்னிதலா, ஆஸ்கர்பெர்னாண்டஸ் ஆகியோர் பலமுறை சென்னை வந்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் மற்றும்நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர்.

வாசனும் பலமுறை டெல்லி சென்று சோனியா காந்தியையும் மூத்த காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்துப்பேசினார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய பதவிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளை அமர்த்த அக் கட்சிஒப்புக் கொண்டது.

ஆனால், அதே போல காங்கிரஸ் வசம் இருந்து பின்னர் த.மா.கா. கைக்கு மாறிய கோடிக்கணக்கான சொத்துக்கள்குறித்தும் இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்படவிலலை.

இந்த விவகாரத்தினால் தான் இணைப்பு மிகவும் கால தாமதமானது. இப்போது இது தொடர்பாகவும் இருதரப்பினரும் ஒரு சமரசத்துக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து இணைப்பு முயற்சிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டன. தனது கட்சியின் அரசியல் விவகாரக்குழு உறுப்பினர்களுடன் வாசன் இன்று டெல்லி விரைந்தார்.

இந்தக் குழுவினர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து இறுதிச் சுற்று பேச்சு நடத்துகின்றனர்.அப்போது இரு கட்சிகள் இணைப்புக்கான தேதியை சோனியா அறிவிப்பார் என்று தெரிகிறது.

இந்த முக்கியமான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கும்சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து இளங்கோவனும் இன்று டெல்லி விரைகிறார்.

அடுத்த மாதம் ஜூலை 15ம் தேதி காமராஜர் நூற்றாண்டு விழா வருகிறது. அந்த தினத்தில் இரு கட்சிகளும்இணையலாம் என்று தெரிகிறது. இணைப்புக்காக த.மா.காவின் தலைமையகமான சத்யமூர்த்தி பவன் புதுப்பொலிவுடன் காத்திருக்கிறது.

இரு கட்சிகளும் இணைந்த பின்னர் இங்கு தான் மீண்டும் காங்கிரஸ் தலைமையகம் இயங்கும் என்று தெரிகிறது.

கட்சிகள் இணைந்த பின்னர் வாசனுக்கே தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி தரப்படுமா என்று தெரியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X