For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் இமாம் அலி ஊடுருவல்: வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டம்?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடி தலைமறைவாக இருந்து வரும் அல்- உம்மா தீவிரவாதி இமாம் அலிசென்னையில் ஊடுருவி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை முழுவதும் தேடுதல் வேட்டைநடந்து வருகிறது.

கடந்த மார்ச் 7ம் தேதி இமாம் அலியும், ஹைதர் அலி என்ற இன்னொரு அல்- உம்மா தீவிரவாதியும் சென்னைமத்திய சிறைச் சாலையில் இருந்து மதுரை நீதிமன்றத்துக்கு விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.

விசாரணைக்குப் பின் மதுரை திருமங்கலம் காவல் நிலையத்துக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். போலீஸ்வேனில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அவர்களை விட்டுவிட்டு போலீசார் உள்ளே சென்றனர்.

அப்போது அந்த இருவரையும் அல்- உம்மா தீவிரவாதக் கும்பல் டாடா சுமோவில் வந்து மீட்டுச் சென்றது.போலீஸ் நிலையத்தின் மீது குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டுவிட்டும் அந்தக் கும்பல் தப்பியது.

இதையடுத்து தென் மண்டல டி.ஐ.ஜி. உள்ளிட்ட மூத்த அதிகாரிகளை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்தது.

இந் நிலையில் ஹைதர் அலி ஒரு காரில் குடும்பத்தினருடன் தப்பிச் சென்றபோது சிவகங்கை அருகே பிடிபட்டான்.அவனை போலீசார் பிடித்ததாகக் கூறினாலும் அவன சரணடைந்தான் என்பதே உண்மை. அவன் தப்பிச்சென்றதையடுத்து போலீசார் அவனது தாய், தந்தை உள்பட உறவினர்களை மிகக் கடுமையாக விசாரித்தனர்.

இதனால், உறவினர்களை காப்பாற்ற ஹைதர் அலியே சரணடைந்துவிட்டான்.

ஆனால், இமாம் அலி தப்பிவிட்டான். அவன் நேபாளத்தில் வெடிகுண்டுகள் தயாரிக்க பயிற்சி பெற்றவன்என்பதால் அவன் வெளியில் இருப்பது எந்த நேரத்திலும் ஆபத்தானது என மத்திய அரசு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

அவனைப் பிடிக்க மதுரை உள்பட அனைத்து இடங்களிலும் போலீசார் கடந்த 3 மாதஙகளாக வலை வீசிவருகின்றனர். இதற்காக பல தனிப்படைகளும் அமைக்கப்பட்டு ரகசியமாக தேடி வருகின்றன. ஆனால், அவன்சிக்கவில்லை.

அவர் பெங்களூருக்குத் தப்ப முயல்வதாக தகவல் கிடைத்ததால் தமிழகத்தில் இருந்து பெங்களூர் செல்லும் ரயில்கள்நள்ளிரவில் திடீர் திடீர் என நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டன. பெங்களூர் செல்லும் பஸ்களிலும்அவ்வப்போது சோதனை நடந்து வருகிறது.

இந் நிலையில் அவன் சென்னைக்குள் ஊடுருவி இருப்பதாக ரயில்வே போலீசாருக்கும் தமிழக உளவுப்பிரிவினருக்கும் ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சென்னையில் உள்ள அனைத்து விடுதிகளிலும் சோதனைகள் நடந்து வருகின்றன. சென்ட்ரல்,எழும்பூர் ரயில் நிலையங்கள், பஸ் ஸ்டான்டுகளில் ரகசிய போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இது தவிர நகர் முழுவதும் சந்தேகப்படும்படியான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

அவன் கால் டாக்சிகளில் மாறி, மாறி பயணம் செய்து வருவதாகவும் கூறப்படுவதால் இந்த டாக்சிகளையும்போலீசார் நிறுத்தி சோதனையிட்டு வருகின்றனர். நகரின் பல சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்குலாரிகள், பஸ்கள், கார்கள் அனைத்தும் சோதனையிடப்படுகின்றன.

பைக்குகள், ஸ்கூட்டர்களில் ஹெல்மெட் போட்டிருப்பவர்ளையும போலீசார் விடவில்லை. அவர்களையும் அதைக்கழற்றச் செய்து சோதனையிட்டு வருகின்றனர்.

சென்னையில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்த அவன் திட்டமிட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்தத்தேடுதல் வேட்டையில் மத்திய உளவுப் பிரிவினரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இமாம் அலியின் பல வித போஸ் புகைப்படங்களும் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

இது குறித்து ரயில்வே கண்காணிப்புக்குழு இணை ஆணையர் வெண்மதி கூறுகையில், ரயில் நிலையங்கள்முழுவதும் தீவிரமான கண்காணிப்பு அமலில் உள்ளது. இமாம் அலியால் எந்தவிதமான அசம்பாவிதமும்ஏற்பட்டுவிடாமல் தடுக்க இரவு பகலாக கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுளளது எனறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X