For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதிக்கு கறுப்புப் பூனைப் படை வாபஸ்: மத்திய அரசு முடிவு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

திமுக தலைவர் கருணாநிதிக்கு வழங்கப்பட்டுள்ள இசட் பிரிவு பாதுகாப்பை (கறுப்புப் பூனைப் படை) வாபஸ் பெறமத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அதே நேரம் முதல்வர் ஜெயலலிதாவின் இசட் பிரிவு பாதுகாப்பை நீட்டிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டபோது மாறன் உள்ளிட்ட திமுகவினர் தாக்கப்பட்டனர். இதனால்தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருணாநிதி கூறியதையடுத்து அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்புவழங்கப்பட்டது. இந்தப் பாதுகாப்பு இருப்பவர்களை மத்திய அரசின் அனுமதியில்லாமல் கைது செய்ய முடியாதுஎன்பதால் ஜெயலலிதாவுக்கு இதன் மூலம் செக் வைக்கப்பட்டது.

முதலில் லாலுவில் ஆரம்பித்து குண்டக்க மண்டக்க அனைவருக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுவந்தது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் செலவாகி வந்தது.

இதையடுத்து பல பேரிடம் இருந்து இந்தப் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. இப்போது வெறும் 12 பேர் தான்இந்தப் பாதுகாப்பில் உள்ளனர். தீவிரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானி, காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, தமிழக முதல்வர் ஜெயலலிதா, உ.பி. முதல்வர்மாயாவதி, முன்னா முதல்வர்கள் கருணாநிதி, ராஜ்நாத் சிங் (உ.பி), பஜன்லால் (ஹரியானா), முலாயம் சிங் யாதவ்(உ.பி), பிரபுல்ல குமார் மகந்தா (அஸ்ஸாம்), பிரகாஷ் சிங் பாதல் (பஞ்சாப்), மாஜி இளைஞர் காங் தலைவர்மனீந்தர் சிங் பிட்டா, நிருபர் அஸ்வினி மின்னா ஆகியோருக்கு மட்டுமே இப்போது இந்தப் பாதுகாப்பு உள்ளது.

அவ்வப்போது இந்தத் தலைவர்களுக்கான ஆபத்து குறித்து (threat perception) மத்திய உளவுப் பிரிவு, உள்துறைஅதிகாரிகள், ரா அதிகாரிகள் ஆலோசனை நடத்துவர். இதில் யாருக்கு இசட் பிரிவு தேவை, யாருக்குத்தேவைப்படவில்லை என்பது குறித்து விவாதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

சமீபத்தில் இதுபோன்ற உயர் மட்டக் கூட்டம் நடந்தது. அதில் கருணாநிதி, மாயாவதி, முலாயம் சிங் யாதவ்,ராஜ்நாத் சிங், பஜன்லால், பிரகாஷ் சிங் பாதல் ஆகியோக்கு இனிமேல் இசட் பிரிவு பாதுகாப்பு தேவையில்லைஎன்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரை மத்திய உள்துறை அமைச்சகரத்திடம் தரப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியவர் உள்துறை அமைச்சர் அத்வானி தான்.

தனக்கு இசட் பிரிவு பாதுகாப்பை ரத்து செய்யக் கூடாது என்று பஜன்லால் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்துள்ளார்.

தலைவர்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவத்தில் மிகச் சிறந்த கமாண்டோ பயிற்சி பெற்ற வீரர்களின்திறமையை வீணடிக்க அரசு விரும்பவில்லை என உள்துறை அமைச்சக மூத்த அதிகாரியொருவர் தெரிவித்தார்.கறுப்புப் பூனைப் படை தங்களை சுற்றி வருவதை கெளரவமாக பல அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள்.இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுவதோடு, நாட்டின் மிகச் சிறந்த கமாண்டோக்கள்வீணடிக்கப்படுகிறார்கள் என்கிறார் அந்த அதிகாரி.

அத்வானி, பரூக் அப்துல்லா ஆகியோர் தீவிரவாதிகளின் கொலைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.மகந்தாவை உல்பா தீவிரவாதிகள் குறி வைத்துள்ளனர். ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து வரலாம்என்று கருதப்படுகிறது.

அதே போல பிட்டா, அஸ்வினி ஆகியோர் காலிஸ்தான் தீவிரவாதிகளின் ஹிட் லிட்டில் உள்ளனர். எனவேஇவர்களுக்கு கறுப்பப் பூனைப் படை பாதுகாப்பு தேவை என அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கருணாநிதி உள்ளிட்ட 6 பேருக்கும் இசட் பிரிவு கறுப்பப் பூனைப் படை பாதுகாப்பை வாபஸ் பெற மத்திய அரசுமுடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. அத்வானி இறுதி முடிவெடுத்த பின்னர் இது அமலுக்கு வரும்.

இதை திமுக கடுமையாக எதிர்க்கும் என்று தெரிகிறது. ஜெயலலிதாவுக்கு இந்தப் பாதுகாப்பை தொடர்வதால்கருணாநிதிக்கும் தொடர வேண்டும் என்று வற்புறுத்தப்படலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X