For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் தீவிரவாதிகளுக்கு புலிகள் உதவி: ஜெயலலிதா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து வரும் மதிமுகவை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.

வைகோ மீதான பொடா வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றார். மேலும் தமிழகத்தில் இயங்கி வரும் தமிழ்தீவிரவாத அமைப்புகளுக்கு விடுதலைப் புலிகள் உதவி செய்து வருவதாகவும் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

சென்னையில் நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா, வைகோவைக் கைது செய்ததில் அரசியல் காரணங்கள் ஏதும் இலலை. கொடூரமானஇயக்கமான விடுதலைப் புலிகளை வைகோ ஆதரித்ததால் தான் கைது செய்யப்பட்டார்.

எனக்கோ அல்லது அதிமுகவுக்கோ மதிமுக ஒரு அரசியல் எதிரியே அல்ல. சட்டமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட ஜெயிக்காத கட்சிமதிமுக. சமீபத்திய இடைத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்த கட்சி அது. அந்தக் கட்சி எப்படி எங்களுக்கு போட்டிக்கட்சியாக முடியும். இதனால், அரசியல் காரணங்களுக்காக வைகோவை நான் கைது செய்ததாகக் கூறுவது தவறு.

சமீபத்தில் நடந்த மதிமுகவின் செயற்குழுக் கூட்டத்தில் கூட இலங்கைத் தமிழர்களுக்காகத் தான் மதிமுகவே இயங்கிக் கொண்டிருக்கிறது.இதற்காகத் தான் மத்திய அரசில் கூட மதிமுக இடம் பெற்றுள்ளது என்று பேசப்பட்டுள்ளது. மேலும் புலிகளக்கு முழு ஆதரவு தரவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குறித்தோ, இந்திய நலன் குறித்தோ மதிமுகவுக்குக் கவலையில்லை. இந்தியாவுக்காக எதையும் செய்ய அவர்கள் தயாராகஇல்லை. மதிமுகவால் மிக மோசமான விளைவுகள் ஏற்படலாம். அது நாட்டுக்கு நல்லதல்ல. எனவே மதிமுகவை தடை செய்ய அரசுஅனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

வைகோ அவராகத் தான் இந்த நிலையை ஏற்படுத்திக் கொண்டார். திருமங்கலம் பொதுக் கூட்டத்தில் அவர் ஏன் அப்படிப் பேசினார்?.அவருக்கு எதிரான அனைத்து ஆவணங்களையும் விரைவில் அமைக்கப்படவுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம் என்றார்.

பின்னர் ஜெயலலிதாவிடம் நிருபர்கள் பல கேள்விகளைக் கேட்டனர். அதன் விவரம்:

நிருபர்: வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கைது செய்யப்படுவார்களா?

ஜெயலலிதா: அவர்கள் இருவரும் மிக ஜாக்கிரதையாக வார்த்தைகளைத் தேர்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். பொடா சட்டத்தில்சிக்கிவிடாத மாதிரி அறிக்கை விட்டுள்ளார்கள். அதனால், அந்த அறிக்கையை வைத்து கைது செய்ய முடியாது. ஆனால்,வைகோ மாதிரியார் பேசினாலும் இந்த அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கும்.

நிருபர்: வைகோ கைது செய்யப்பட்டது தேவையில்லாதது என பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் அருண் ஜேட்லி கூறியுள்ளாரே?

ஜெயலலிதா: அவர் ஒரு மிகச் சிறந்த வழக்கறிஞர். முன்னாள் சட்ட அமைச்சர். ஆனால், அரசியல் நெருக்குதல்கள் காரணமாக அவர்இப்படி பேச வேண்டிய அவசியத்தில் உள்ளார்.

நிருபர்: இந்த விஷயத்தில் மத்திய அரசு ஏதும் எதிர்ப்பு தெரிவித்ததா?

ஜெயலலிதா: வைகோ மீது எடுக்கப்பட இருந்த நடவடிக்கைகள் குறித்து முன்பே உள்துறை அமைச்சர் அத்வானிக்கு விளக்கமாக கடிதம்எழுதிவிட்டேன். திருமங்கலத்தில் வைகோ பேசிய பேச்சின் வீடியோவை அனுப்பி வைத்துவிட்டேன். அந்தக் கடிதமும் வீடியோவும்கிடைத்ததாக அத்வானி எனக்கு பதில் அனுப்பினார். வீடியோவை தனது அமைச்சக அதிகாரிகளிடம் தந்திருப்பதாகக் கூறினார்.

நிருபர்: வைகோவைக் கைது செய்ய மத்திய அரசு உங்களுக்கு போதிய அளவு ஒத்துழைத்ததா?

ஜெயலலிதா: மத்திய அரசின் உதவியை நாங்கள் கேட்கவில்லை.

நிருபர்: தமிழகத்தில் புலிகள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை என்று வைகோ கூறியுள்ளாரே?

ஜெயலலிதா: இது மிகத் தவறான வாதம். புலிகளுக்கும் தமிழகத்தில் இயங்கி வரும் தமிழ் தேசிய விடுதலை அமைப்பு, தமிழ் தேசியஎழுச்சிப் படை, நக்சல் அமைப்பான மக்கள் போர்ப் படை ஆகியவற்றும் இடையே உள்ள தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியவிடுதலை அமைப்பு, தமிழ் தேசிய எழுச்சிப் படை போன்ற செத்துப் போன இயக்கங்களுக்கு புலிகளின் உதவி தான் மீண்டும் உயிர்தந்திருக்கிறது.

சமீபத்தில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயை நான் சந்தித்தபோது கூட புலிகள் விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாகஇருக்குமாறு எச்சரித்தேன். கொடுத்த வாக்குறுதியை மீறுவதில் புலிகளை மிச்ச ஆள் கிடையாது என்றார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X