எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் டூ மறு தேர்வுகள் செப்டம்பர் 30ல் தொடக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் டூ ஆகியவற்றுக்கான மறு தேர்வுகள் வரும் செப்டம்பர் 30ம் தேதி தொடங்கும்என்று தேர்வுத்துறை இயக்குனர் பழனிவேலு கூறினார்.

சென்னையில் இன்று அவர் கூறியதாவது:

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் நடைபெற்ற பிளஸ் டூ மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. ஆகியவற்றுக்குத்தேர்வுகளுக்கு மே-ஜூன் மாதங்களில் முடிவுகள் வெளியிடப்பட்டன.

இவற்றில் ஓரிரு பாடங்களில் தோல்வியடைந்த மாணவ-மாணவிகளுக்குக் கடந்த ஜூலை மாதம் உடனடி மறுதேர்வுகள் நடத்தப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் இந்த ஒரு ஆண்டை வீணாக்காமல்மேற்படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தப் பொதுத் தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவ-மாணவிகளுக்கு வழக்கமாக நடைபெறும்மறு தேர்வுகள் வரும் செப்டம்பர் 30ம் தேதி தொடங்குகின்றன.

பிளஸ் டூவில் தோல்வியடைந்து விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவிகளுக்கு செப்டம்பர் 30ம் தேதி மொழிப்பாடத் தேர்வும், அக்டோபர் 1ம் தேதி ஆங்கிலப் பாடத் தேர்வும் நடைபெறும்.

பின்னர் அக்டோபர் 3ம் தேதி இயற்பியல், வரலாறு, அக்கவுண்டன்சி மற்றும் சித்தா தேர்வுகள் நடைபெறும். அதன்பிறகு அக்டோபர் 11ம் தேதி வரை தொடர்ந்து தேர்வுகள் நடக்கும்.

இதற்கிடையே எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேசன் மற்றும் ஆங்கிலோ இந்தியன்மாணவ-மாணவிகளுக்கான மறு தேர்வுகள் செப்டம்பர் 30ம் தேதி தொடங்கி அக்டோபர் 8ம் தேதி வரை நடக்கும்என்றார் பழனிவேலு.

Mail this to a friend  Post your feedback  Print this page 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற