For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருவள்ளூரில் ரஜினி ரசிகர்கள் வன்முறை: அரசு பஸ்கள் உடைப்பு

Google Oneindia Tamil News

சென்னை:

ரஜினி ரசிகர்கள் தங்களது கட்டுப்பாடுகளை எல்லாம் மீறி வன்முறையில் இறங்கியுள்ளார்கள். பாட்டாளி மக்கள்கட்சித் தலைவர் ராமதாஸைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டுவருகிறார்கள்.

திருவள்ளூர் துளசி தியேட்டரில் ரஜினியின் "பாபா" படம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக வந்திருந்த ரசிகர்கள்,படத்தை பார்ப்பதை விட்டு விட்டு தியேட்டருக்கு வெளியே ராமதாஸ் கொடும்பாவியை எரிக்க முயன்றனர்.ஆனால் போலீசார் அதை அனுமதிக்க மறுத்தனர். இதையடுத்து ரசிகர்கள் வன்முறையில் இறங்கினர்.

சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை ஆபாச வார்த்தைகளால் மிரட்டி விரட்டியடித்தனர். ஒரு கும்பல் அந்தப்பகுதி வழியாக வந்த 2 அரசு பஸ்கள் மீது கல்வீசித் தாக்கியது. இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்தன.

இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி ரஜினி ரசிகர்களை விரட்டியடித்தனர்.

ஆனாலும் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த அரசு பஸ்களில் ரஜினி ரசிகர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதுஅப்பகுதியில் உள்ளவர்களிடையே பெரும் பரபரப்பையும் கோபத்தையும் கிளப்பியது.

அரசியலுக்கு ரஜினியை வரச் சொல்லும் இவர்கள் இப்போதே இப்படி வன்முறையில் ஈடுபடுகிறார்களே. நாளைஅவர் அரசியலுக்கு வந்து விட்டால், பொதுமக்களின் கதி என்னவாகும் என்று பொதுமக்கள் கோபத்துடன் கூறிக்கொண்டே சென்றனர்.

மதுரையில் அழகிரிக்காக திமுகவினர் அரசு பஸ்களை உடைத்த சம்பவத்தில் வழக்குப் போட்டது மாதிரிஇப்போதும் ரஜினி ரசிகர்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் சிலர் கூறினர்.

ரஜினி ரசிகர்கள் போராட்டம்:

இதற்கிடையே பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் "பாபா" படம் திரையிடப்பட்ட தியேட்டர்தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டதோடு "பாபா" படப்பெட்டியும் கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம்முழுவதும் ரஜினி ரசிகர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

ஜெயங்கொண்டம் சம்பவத்திற்கும் பாமகவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதும் ரஜினி ரசிகர்கள் அக்கட்சிநிறுவனர் ராமதாசைக் கண்டித்தும், தியேட்டர் எரிக்கப்பட்டதற்குக் காரணமானவர்களைக் கைது செய்யக் கோரியும்சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் போராட்டம் நடத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். "பாபா" திரையிடப்பட்டுள்ளதியேட்டர்களிலும் போலீசார் அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஜெயங்கொண்டத்துக்கு புதிய "பாபா" படப்பெட்டி:

இதற்கிடையே ஜெயங்கொண்டத்தில் "பாபா" படப்பெட்டி கொள்ளையடிக்கப்பட்டதைத் தொடர்ந்துசென்னையிலிருந்து இப்படத்தின் புதிய படப்பெட்டி ஒன்று அந்தத் தியேட்டருக்கு அனுப்பப்பட்டது.

நேற்று மாலை 3.30 மணிக்கு அந்தப் படப்பெட்டி ஜெயங்கொண்டத்திற்கு வந்து சேர்ந்தது. பின்னர் 4 மணிக்குபலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தத் தியேட்டரில் "பாபா" ரிலீஸ் செய்யப்பட்டது.

"பாபா" படப்பெட்டியை திருடியது யார்?

இதற்கிடையே "பாபா" படப் பெட்டி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பாமகவைச் சேர்ந்த சிலரிடம்போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்காக மூன்று தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராமதாஸ் மயிலாடுதுறையில் பேசும்போது "பாபா"வையாரும் பார்க்காதீர்கள் என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து பாமகவினரே இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம்என்று கருதப்படுகிறது.

ஆனால் ஜெயங்கொண்டம் பகுதியில் பாமகவினர் ஆதிக்கம் அவ்வளவாக இருப்பது போல் தெரியவில்லை.இப்பகுதியில தமிழர் தேசிய இயக்கப் படை போன்ற இயக்கத்தினரின் செயல்பாடுகள் தான் அதிகமாக உள்ளன.

எனவே இந்த இயக்கத்தினருக்கும் படப்பெட்டி கொள்ளைக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்ற கோணத்திலும்போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X