For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஞ்சாவூரில் சிறுவன் பட்டினியால் சாவு

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் அருகே பட்டினி காரணமாக ஒரு விவசாயியின் 7 வயது மகன் இறந்தான்.

கிடடத்தட்ட 3 நாட்கள் கொலைப் பட்டினி கிடந்துள்ளது அவனது குடும்பம். இதனால் பள்ளிக்குச் செல்லும்வழியில் கடும் வெயிலிலில் ரோட்டிலேயே சுருண்டு விழுந்து இறந்தான் அந்தச் சிறுவன்.

ஒரு பக்கம் நெசவாளர்கள் பட்டினியால் வாட, இன்னொரு பக்கம் காவிரிப் படுகை விவசாயிகள் பட்டினிகிடக்கின்றனர். நெசவாளர்களுக்கு கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் முட்டைப் பிரியாணிவழங்கப்பட்டாலும், காவிரி டெல்டா விவசாயிகளை சீந்துவார் யாருமில்லை.

கடும் வறட்சி காரணமாக இந்த ஆண்டு தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த காவிரி டெல்டா விவசாயிகள் கடுமையாகப்பாதிப்படைந்துள்ளனர். போதாக் குறைக்கு கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்து விடாத காரணத்தால்விவசாயிகளால் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் போனது.

இப்போது கர்நாடகம் தொடர்ந்து பிடிவாதம் பிடிப்பதால் சம்பா நெல் சாகுபடியும் நடக்கவில்லை. இதனால்விவசாயத் தொழில் மட்டுமே தெரிந்த விவசாயிகளுக்கு எந்த வேலையும் இல்லை.

தினக் கூலிகளான இவர்களுக்கு வேலை இல்லாததால் கூலியும் இல்லை. இதனால், பெரும்பாலான விவசாயிகள்அன்றாடம் சாப்பிடுவதற்கே பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. பலர் கொலைப் பட்டினி கிடக்கின்றனர்.

இவர்களுக்கு மாற்று வேலை தருவதாகக் கூறி தமிழக அரசு சுமார் ரூ. 160 கோடி செலவில் அமலாக்கியுள்ளதிட்டமும் எந்தப் பலனும் தரவில்லை. கண்மாய் வெட்டுவது, ரோடு போடுவது என வேலைகளை இந்தவிவசாயிகளுக்குக் கொடுத்து கொஞ்சம் பணமும், அரிசியும் கூலியாகத் தருகின்றனர்.

ஆனால், இந்த வேலையும் தினமும் கிடைப்பது இல்லை. வாரத்துக்கு ஒரு நாள் தான் அதிகபட்சம் வேலைதரப்படுகிறது. வாரம் ஒரு நாள் கிடைக்கும் சில கிலோ அரிசியும் பணமும் இந்தக் குடும்பங்களின் பட்டினியைமுழுவதுமாகப் போக்க உதவுவதாக இல்லை.

இதனால், பல விவசாயக் குடும்பங்கள் வாரத்தில் பாதி நாள் பட்டினியாகத் தான் இருக்க வேண்டிய நிலைஉருவாகியுள்ளது. நிலத்தில் இறங்கி மாநிலத்துக்கே சோறு போட்ட விவசாயிகள் இன்று பட்டினி கிடக்கும் நிலை.

பசியின் கொடுமைமை பெரியவர்கள் எப்படியோ சமாளித்து விடுகிறார்கள். ஆனால் குழந்தைகளோசிறுவர்-சிறுமிகளோ இந்தப் பசியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சுருண்டு விழுந்து வருகின்றனர்.

பள்ளிக்குப் போனால் ஒருவேளை சத்துணவாவது கிடைக்கும் என்பதால் குழந்தைகளை பெற்றோர் தவறாமல்பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால், பள்ளிக்கு நடந்து செல்ல உடலில் சத்து வேண்டுமே.

தஞ்சாவூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள ஆதிச்சபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் பிரகாஷ் பள்ளிக்குச்சென்று கொண்டிருந்தபோதே வழியில் சுருண்டு விழுந்துள்ளான். அவன் பட்டினியால் தான் சுருண்டுவிட்டான்என்பதை உடனே தெரிந்து கொண்டே அந்த ஊர் மக்கள் அவனைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குஓடியுள்ளனர்.

ஆனால், அவன் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டான்.

அவனுக்கு வயது 7 தான். அவனுடன் பிறந்த மற்ற நால்வரும் கூட பசியால் வீட்டில் மயங்கித் தான் கிடக்கின்றனர்.பிரகாஷின் வீட்டில் அனைவரும் மூன்று நாட்களாகக் கொலைப் பட்டினி கிடந்துள்ளது விசாரணையில்தெரியவந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X