For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயா-கிருஷ்ணா மீண்டும் கடும் மோதல்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி & சென்னை:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் இன்று மீண்டும் ஒருவரையொருவர்கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.

காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசும் மத்திய பாஜக அரசும் மாறி மாறித் தொடர்ந்து ஏமாற்றிவருகின்றன என்று ஜெயலலிதா நேற்று குற்றம் சாட்டியிருந்தார்.

தவிர, வீரப்பனுக்குக் கர்நாடக அரசு ரூ.30 கோடி கொடுத்துத் தான் நடிகர் ராஜ்குமாரை மீட்டது என்றும்ஜெயலலிதா கூறினார்.

மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டவர் என்று நேற்றும் தாக்கிப் பேசிய ஜெயலலிதா, தான்கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்றும் மைசூரில் பிறந்த தமிழ்ப் பெண் என்றும் கூறியிருந்தார்.

ஜெயலலிதா இவ்வாறு பேசியிருப்பதற்கு கிருஷ்ணா இன்று கடுமையான கண்டனம் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில் இதுகுறித்துஆலோசனை நடத்துவதற்காக டெல்லி வந்த கிருஷ்ணா நிருபர்களிடம் கூறுகையில்,

ஜெயலலிதா கர்நாடகத்தைச் சேர்ந்தவர் தான். ஆனால் தமிழக மக்களுக்கு நன்மை செய்வது போல் பாவனைசெய்வதற்காகத் தான் தன்னை தமிழ்ப் பெண் என்று காட்டிக் கொள்கிறார்.

கர்நாடக அரசு மீதும் என் மீதும் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதன் மூலம் தமிழக மக்களைக் கவர்ந்து விடலாம்என்று கனவு காண்கிறார். ஆனால் இதன் மூலம் தமிழர்கள் அனைவரையும் ஜெயலலிதா ஏமாற்றி வருகிறார்.

பிரதமர் வாஜ்பாய் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் தலைவர் மீதும் நம்பிக்கை இல்லை. மேலும் என்மீதும் ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை இல்லை. அவருக்கு யாரிடம் தான் நம்பிக்கை வரும் என்று எனக்குத்தெரியவில்லை.

சோனியா இந்திய நாட்டைச் சேர்ந்தவர் தான் என்பதை உச்ச நீதிமன்றமே கூறி விட்டது. எனவே இது ஒரு முடிந்துபோன விவகாரம். இதைத் தோண்டி பிரச்சனை எழுப்பிக் கொண்டிருப்பதில் அர்த்தமே இல்லை.

இருந்தாலும் அடுத்தவர்களைக் குறை சொல்வதே ஜெயலலிதாவின் வழக்கமாகப் போய்விட்டது என்றார்கிருஷ்ணா.

ஜெ. மீண்டும் பாய்ச்சல்:

இதற்கிடையே ஜெயலலிதா இன்று மீண்டும் ஜெயலலிதாவைத் தாக்கிப் பேசியுள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

கர்நாடக முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே சோனியாவுக்கு எஜமானவிசுவாசத்தோடு நடந்து கொள்கிறார். அதனால் தான் நான் கூறிய குற்றச்சாட்டுக்களை கிருஷ்ணா மறுத்துவருகிறார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் வீரப்பனைப் பிடிக்க இரு மாநிலங்களுமே இணைந்து செயல்பட வேண்டியகட்டாயத்தில் உள்ளோம்.

இந்நிலையில் என் மீது தேவையற்ற புகார்களை கிருஷ்ணா அள்ளி வீசி வருகிறார். இது மிகவும்துரதிருஷ்டவசமானது.

ராஜ்குமார் விடுவிக்கப்பட்டதற்காக ரூ.30 கோடியை வீரப்பனுக்குக் கொடுத்த விவகாரத்தில் கிருஷ்ணாவைத்தாக்குவதற்காகத் தான் நான் அவ்வாறு கூறியதாக அனைவரும் நினைக்கின்றனர். அது தவறு.அதிரடிப்படையினரை முழுமையாக விசாரித்துப் பார்த்தால் உண்மை நிலை தெரிய வரும்.

தமிழக அதிரடிப்படையினர் தொடர்ந்து வீரப்பனைப் பிடிக்கும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் என்றுஅவ்வறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஜெ.க்கு எதிராக காங்கிரஸ் அவதூறு வழக்கு:

இதற்கிடையே சோனியா வெளிநாட்டவர் என்று பேசியதற்காக ஜெயலலிதாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புவழக்கு தொடரப் போவதாக கர்நாடக சட்டத்துறை அமைச்சர் சந்திரேகவுடா இன்று கூறினார்.

ஒரு அமைச்சராக இல்லாமல் சாதாரண இந்தியக் குடிமகனாக இந்த வழக்கைத் தொடரப் போவதாக அவர்நிருபர்களிடம் தெரிவித்தார்.

சோனியா ஒரு இந்தியர் தான் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்து விட்ட நிலையில் அவர்வெளிநாட்டவர் என்று ஜெயலலிதா கூறியதால் இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்று கூறியசந்திரேகவுடா, இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து விரைவில் வழக்கு தொடரவுள்ளதாகவும்கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X