For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் நாளை கிரிக்கெட் டெஸ்ட்: பலத்த பாதுகாப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இந்திய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2வது கிரிக்கெட் டெஸ்ட் நாளை சென்னையில்நடைபெறுவதைத் தொடர்ந்து சேப்பாக்கம் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த வாரம் மும்பையில் நடந்த முதல் டெஸ்ட்டில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை இந்தியா ஒரு இன்னிங்ஸ்மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாகத் தோற்கடித்தது.

இந்நிலையில் நாளை சென்னை-சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் தொடங்குகிறது.

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் மற்றும் கேப்டன் சவுரவ் கங்குலி உள்ளிட்ட சிலவீரர்களுக்கு பயங்கரவாதிகளிடமிருந்து தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதால், சேப்பாக்கம்மைதானத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் விஜயகுமார் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின்னர் இணை போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு நிருபர்களிடம்கூறுகையில்,

மைதானத்தைச் சுற்றிலும் நேற்றிலிருந்தே நூற்றுக்கணக்கான போலீசார் துப்பாக்கிகளுடன் நிறுத்தப்பட்டுள்ளனர்.முக்கியமான வாசல்களிலும் போலீசார் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாளை காலை ஆட்டம் தொடங்கும் வரை பிட்ச்சில் கூட துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட உள்ளனர்.போட்டி நடக்கும் ஐந்து நாட்களிலும் மொத்தம் 1,500 போலீசார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.

சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றியுள்ள சாலைகளிலும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.வாகனங்களில் வரும் ரசிகர்கள் அவற்றை வெகு தூரத்தில் நிறுத்தி விட்டு நடந்து தான் மைதானத்திற்கு வரவேண்டியிருக்கும்.

ரசிகர்கள் சுதந்திரமாகவும், அதே நேரத்தில் அமைதியாகவும் போட்டியைப் பார்த்து மகிழ்வதற்காக சிலகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கட்டைகள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. உணவுப் பொருட்கள், தண்ணீர் கொண்டு செல்லலாம். ஆனால்கடினமான டிபன் பாக்ஸ்களையெல்லாம் கொண்டு போகக் கூடாது. அதே போல் மது பாட்டில்கள், தீப்பெட்டிகள்ஆகியவற்றையும் அவர்கள் கொண்டு செல்லக் கூடாது.

உணர்ச்சிவசப்பட்டு பொருட்கள் எதையும் ஆடுகள மைதானத்திற்குள் ரசிகர்கள் வீசி எறியக் கூடாது.பட்டாசுகளையும் வெடிக்கக் கூடாது மேலும் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலும் அவர்கள் அதைப்பயன்படுத்தக் கூடாது. மீறினால் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள்.

கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வரும் பெண்களை ஆண்கள் யாரும் கிண்டல் செய்யக் கூடாது. விசில் அடித்துபோட்டியை ரசிப்பதில் தவறில்லை. ஆனால் கலாட்டா எதுவும் நேர்ந்துவிடக் கூடாது.

ரசிகர்கள் ஏதாவது விஷமம் செய்து விட்டு, கூட்டத்தோடு கூட்டமாகத் தப்பிவிடலாம் என்று நினைத்துவிடக்கூடாது. அவர்களை எப்போதுமே ரகசியக் காமிராக்கள் கண்காணித்துக் கொண்டேயிருக்கும் என்றார் சைலேந்திரபாபு.

இதற்கிடையே இரு நாட்டு கிரிக்கெட் வீரர்களும் ஏற்கனவே சென்னை வந்து சேர்ந்து விட்டனர். அவர்கள் பலத்தபாதுகாப்புடன் ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சில பொது நிகழ்ச்சிகளிலும் அவர்கள் கடந்த இரண்டுநாட்களாகக் கலந்து கொண்டு ஆட்டோகிராப்புகள் போட்டுக் கொடுத்து குழந்தைகளையும், ரசிகர்களையும்மகிழ்வித்தனர்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X