For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினி உண்ணாவிரதத்தில் நடிகர், நடிகைகள் திரளாக பங்கேற்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காவிரியில் தண்ணீர் விட வலியுறுத்தி நடிகர் ரஜினிகாந்த் தனது உண்ணாவிரதத்தை இன்று காலை சுமார் 8 மணிக்குதுவக்கினார்.

ரஜினிக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி இந்த உண்ணாவிரதத்தை காங்கிரஸ் ஜனநாயகப்பேரவையின் தலைவர் ப.சிதம்பரம் துவக்கி வைத்தார். ரஜினியுடன் சுமார் 15 நிமிடங்கள் உட்கார்ந்திருந்தசிதம்பரம் பின்னர் சென்றுவிட்டார்.

முன்னதாக உண்ணாவிரத மேடைக்குக் கிளம்புவதற்கு முன், நெய்வேலியில் பாரதிராஜா பேசியது குறித்துரஜினியிடம் நிருபர்கள் கேட்ட போது, "அவர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசியுள்ளார். இது நல்லதுக்கில்லை" என்றுபதிலளித்தார் அவர்.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே போடப்பட்டுள்ள பந்தலுக்கு காலை 8 மணிக்கு வந்த ரஜினி தனதுபோராட்டத்தைத் துவக்கினார். அதற்கு முன்னதாகவே காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் தலைவர் ப.சிதம்பரம்பந்தல் அருகே வந்து காத்துக் கொண்டிருந்தார்.

வெள்ளை உடையில் வந்த ரஜினியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்று உண்ணாவிரதப் பந்தலுக்குஅழைத்துச் சென்றனர். அவருடன் பந்தலில் உண்ணாவிரதத்தில் ஈடுபட ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.

அவர்கள் தூரத்திலேயே தடுக்கப்பட்டுவிட்டனர். இதனால் பல மாவட்டங்களில் இருந்து வந்த ரசிகர்களும்வேன்களை தூரத்திலேயே நிறுத்திவிட்டு ஆங்காங்கே கூடி ரஜினிக்கு ஆதரவாகவும், பாரதிராஜாவுக்கு எதிராகவும்கோஷம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நடிகர், நடிகைகள்:

ரஜினியுடன் விஜயகுமார், மஞ்சுளா, அர்ஜூன், பிரபு, அலெக்ஸ், அப்பாஸ், ராஜீவ், நாடக நடிகர் ரவி ராகவேந்தர்(இவர் ரஜினியின் மைத்துனர்), டைரக்டர் மகேந்திரன் ஆகியோரும் வந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

விஜய்காந்த் காலை 10.30 மணியளவில் வந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார். பின்னர் நண்பகல் வாக்கில்அவரும் கிளம்பிச் சென்று விட்டார்.

பின்னர் திமுக நடிகர்களான சரத்குமார், சந்திரசேகர், தியாகு, நெப்போலியன் ஆகியோரும் வந்துஉண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். நெய்வேலி போராட்டம் குறித்து ரஜினியிடம் சரத் விளக்கினார்.

காய்ச்சல் என்று கூறிக் கொண்டு நேற்று நெய்வேலி போகாத ராதிகா மிகவும் தெம்புடன் இன்றைய ரஜினியின்உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

இவர்களைத் தொடர்ந்து நடிகர்கள் கமலஹாசன், சிவக்குமார், சூர்யா, அப்பாஸ், முரளி, விஜய், கவுண்டமணி,பார்த்திபன், மலேசியா வாசுதேவன், ஆனந்தராஜ், அலெக்ஸ், இயக்குனர் மகேந்திரன், ரஜினியை வைத்து அதிகப்படங்கள் இயக்கிய எஸ்.பி. முத்துராமன், தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி., இசையமைப்பாளர் கங்கை அமரான்,சென்னை-செங்கை மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் சிந்தாமணி முருகேசன் ஆகியோரும்மேடைக்கு வந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

ரஜினியின் போராட்டத்துக்கு நடிகர் சங்கத் தலைவர் விஜய்காந்த் ஆதரவு தெரிவித்ததால் பெரும்பாலான நடிகர்,நடிகைகளும் இதில் வந்து பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நெய்வேலி போராட்டத்தை முடித்துக் கொண்டு இரவு தாமதமாகத் தான் அனைத்து நடிகர், நடிகைகளும் சென்னைதிரும்பினர். இதனால் காலை 8 மணிக்கு அவர்கள் ரஜினியின் உண்ணாவிரதத்துக்கு வரவில்லை.

ஆனால், நேரம் செல்லச் செல்ல யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டு மற்ற திரைக்கலைஞர்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்தனர்.

பாரதிராஜா புறக்கணிப்பு:

இந்நிலையில் காவிரி விவகாரத்தில் துவக்கத்திலிருந்தே ரஜினியுடன் "கர் புர்" என்று இருக்கும் இயக்குனர்பாரதிராஜா இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தார். போராட்டத்துக்கும் அவர்வரவில்லை.

ரஜினியின் போராட்டத்தை பிற நடிகர்களும் புறக்கணிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

கருணாநிதி ஆதரவு:

இந்தப் போராட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி ஆதரவு தெரிவித்துள்ளார்.

அவரே உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து ரஜினியை நேரடியாக வாழ்த்தவும் திட்டமிட்டிருந்ததாக அண்ணாஅறிவாலயத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் திமுக சார்பில் ஒரு ஆதரவுக் கடிதத்தை மட்டும் கட்சியின்இளைஞரணித் தலைவரான மு.க. ஸ்டாலினிடம் கொடுத்து அனுப்பிவிட்டார்.

நேற்று மதுரையில் நடந்த ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதத்தையும் ப.சிதம்பரம் தான் துவக்கி வைத்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது. இதில் மு.க. அழகிரியும் கலந்து கொண்டார் என்பதும் நினைவிருக்கலாம்.

இதற்கிடையே அதிமுக நடிகர்கள் இந்தப் போராட்டத்தை புறக்கணிப்போம் என அறிவித்துள்ளனர்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று ரஜினியின் உண்ணாவிரத மேடையில்அமர்ந்திருந்தார். ஜனதா கட்சியின் மாநிலத் தலைவி சந்திரலேகா ஆகியோரும் மேடைக்கு வந்து ரஜினிக்குவாழ்த்துத் தெரிவித்துவிட்டு சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டுத் திரும்பினார்.

பலத்த பாதுகாப்பு:

ரஜினியின் உண்ணாவிரதத்தையடுத்து அந்தப் பகுதியில் மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.போக்குவரத்தும் மாற்றிவிடப்பட்டது.

மாலை 5 மணி வரை தனது உண்ணாவிரதத்தை மேற்கொள்வார். உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு ஆளுநர்மாளிகை சென்று அவரிடம் மனு கொடுக்கவும் ரஜினி திட்டமிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X