For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத் தேர்தல்: பா.ஜ.கவுக்கு நீதிமன்றம் சூடு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தலை தேர்தல் கமிஷன் ஒத்தி வைத்தது சரி தான் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தைத் தொடர்ந்து சூட்டோடு சூடாக தேர்தல் நடத்தி அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க. முயன்றது.இதற்காக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சட்டசபையை திடீரென கலைத்துவிட்டு உடனே தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரியது.

ஆனால், குஜராத்தில் முழு அமைதி திரும்பவில்லை என்றும் மதக் கலவரத்தால் வீடுகளை விட்டு விரட்டியடிக்கப்பட்டலட்சக்கணக்கான மக்கள் வாக்களிக்கும் சூழ்நிலை ஏற்படும் வரை தேர்தல் நடத்த முடியாது எனவும் தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இதையடுத்து தலைமைத் தேர்தல் ஆணையர் லிங்டோவுடன் குஜராத் பா.ஜ.க. முதல்வர் நரேந்திர மோடி மோதினார்.

கிருஸ்துவர் என்று சொல்லி...

கிருஸ்துவர் என்பதால் தான் தேர்தலை ஒத்தி வைக்க லிங்டோ முயல்வதாக மோடி குற்றம் சாட்டினார். மோடியின் இந்தப் பேச்சுக்குமிகக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனக்கு மதமே கிடையாது என்று கூறி மோடிக்கு லிங்டோவும் பதிலடி தந்தார்.

நிலைமை மோசமானதால் பிரதமர் வாஜ்பாய் தலையிட்டு மோடியின் வாயை அடைத்தார். ஆனால், மோடிக்கு துணைப் பிரதமர்அத்வானி முழு ஆதரவு தந்தார்.

மத்திய அரசும் நெருக்குதல்:

அந் நிலையில் அரசியல் சட்டப்படி கடைசி சட்டமன்றக் கூட்டம் நடந்த 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தியே ஆக வேண்டும் எனமத்திய பா.ஜ.க. அரசும் தேர்தல் கமிஷனை நெருக்கியது.

ஆனால், தங்கள் வசதிக்காக சட்டசபையைக் கலைத்துவிட்டு, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக இருக்கும்போது தேர்தல்நடத்தச் சொல்வதை ஏற்க முடியாது என தேர்தல் கமிஷன் கூறியது.

இதைத் தொடர்ந்து ஜனாதிபதி மூலமாக உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகியது. குஜராத் தேர்தல் ஒத்தி வைப்பு சரிதானாஎன்று கேள்வி எழுப்பியது மத்திய அரசு. இந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் வழக்கறிஞர், தேர்தல் கமிஷனுக்குஎதிராக வாதாடினார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி கிர்பால் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசனபெஞ்ச் தனது தீர்ப்பை வழங்கியது.

தேர்தல் கமிஷனை நிர்பந்திக்க முடியாது:

அந்தத் தீர்ப்பின் விவரம்:

தேர்தலை எப்போது நடத்தலாம் என்று தேர்தல் கமிஷன் முடிவு செய்ய முழு அதிகாரம் உண்டு. சட்டசபையை இடையில்கலைத்துவிட்டு 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று யாரும் நிர்பந்திக்க முடியாது. அரசியல் சட்டத்தில் இதற்குஇடமில்லை.

இடையில் கலைக்கப்பட்ட சட்டமன்றத்துக்கு எப்போது தேர்தல் நடத்துவது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல்கமிஷனுக்கு உண்டு. ஆனால், தேர்தலை எவ்வளவு சீக்கிரம் நடத்த முடியுமோ அதை நடத்துவது தேர்தல் கமிஷனின் கடமை எனநீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இந்தத் தீர்ப்பின் மூலம் மத்திய அரசுக்கும், மாநில பா.ஜ.க. அரசுக்கும் உச்ச நீதிமன்றம் சூடு கொடுத்துள்ளது.

டிசம்பர் 12ல் தேர்தல்:

இந் நிலையில் குஜராத்தில் தேர்தல் தேதியை தேர்தல் கமிஷ்னர் லிங்டோ இன்று அறிவித்தார். டெல்லியில் நிருபர்களிடம் பேசியஅவர், டிசம்பர் 12ம் தேதி அங்கு தேர்தல் நடக்கும். 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும். 20ம் தேதி தேர்தல் பணிகள்அனைத்தும் முடிவடைந்துவிடும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் இன்று முதல் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

குஜராத்தில் தேர்தலை அமைதியாக நடத்த 400 கம்பெனி (38,000) மத்தியப் படைகளின் உதவியை கேட்டுள்ளோம்.

குஜராத்தில் 3.28 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 4 லட்சம் பேருக்கும் வாக்குரிமை உள்ளது. ஆனால், இவர்கள் தங்களதுவசிப்பிடத்தில் இப்போது இல்லை. (மதக் கலவரத்தால் முகாம்களிலும், பிற இடங்களிலும் இவர்கள் குடிபெயர்ந்து வாழ்ந்துவருகின்றனர்). இவர்களில் 1.76 லட்சம் பேரை தேர்தல் கமிஷனால் கண்டுபிடிக்க முடிந்தது. மற்றவர்களை அடையாளம் காணமுடியவில்லை.

தேர்தலை ஒரே நாளில் நடத்தி முடிப்போம். இதற்காக 35,052 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்படும். மின்னணுவாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தியே தேர்தல் நடக்கும் என்றார் லிங்டோ.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X