For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உயிரியல் ஆயுதங்களை இந்தியா தயாரிக்காது: கலாம்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

மனித குலத்தையே அழித்து விடும் கொடூரத்தனம் மிக்க உயிரியல் ஆயுதங்களை (Biological weapons) இந்தியாதயாரிக்காது என்று ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் கூறினார்.

பெங்களூர் பேலஸ் கிரவுண்டில் உள்ள அல்-அமீன் கல்வி நிறுவனத்தில் மாணவ-மாணவிகளுடன் வழக்கம்போலவே டாக்டர் கலாம் சரளமாக உரையாடினார்.

மாணவ-மாணவிகளைத் தவிர மற்றவர்கள் எல்லாம் அரங்கின் முன் வரிசையில் அமர்ந்திருந்ததைப் பார்த்துடாக்டர் கலாம் சிறிது வருத்தமடைந்து, நான் மாணவ-மாணவிகளுடன் உரையாடுவதற்காகத் தான் இங்கேவந்துள்ளேன். ஆனால் அவர்கள் பின் வரிசைகளில் அமர்ந்திருப்பது துரதிருஷ்டம் தான் என்றார்.

பின்னர் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு தான் உயிரியல் ஆயுதங்கள் மிகவும் கொடூரமானது என்பதால் அவற்றைஇந்தியா தயாரிக்கவே தயாரிக்காது என்று டாக்டர் கலாம் பதிலளித்தார்.

போரும் அமைதியும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க முடியுமா என்று ஒரு மாணவர் கேட்டதை வெகுவாகப்பாராட்டிய டாக்டர் கலாம், நம் நாடு பாதுகாப்புடன் இருந்தால் தான் அமைதியாக இருக்க முடியும். அந்தஅமைதிக்கு பாதுகாப்பு அவசியம். அந்தப் பாதுகாப்புக்காகத் தான் ஏவுகணைகளும், அணு ஆயுதங்களும்தயாரிக்கப்படுகின்றன என்று விளக்கமளித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், முன்பெல்லாம் இந்தியாவில் பாதுகாப்பு மிகமிகக் குறைவாக இருந்ததால்தான் ஆங்கிலேயர் உள்ளிட்ட அந்நிய நாட்டினர் நம்மை அடிமைப்படுத்தி இருந்தனர் என்று குறிப்பிட்டார்.

இடையே ஒரு முறை மின்சார சப்ளை நின்று போனதால், மைக்கில் பேச முடியாத டாக்டர் கலாம் உடனடியாகமளமளவென்று இறங்கி வந்து மாணவ-மாணவிகளின் மத்தியில் நின்று கொண்டு சரளமாகப் பேசினார்.

அவருடைய பாதுகாப்பு அதிகாரிகளும் உடனடியாக அவரைச் சுற்றிக் கொண்டு நிற்க முயற்சித்தனர். ஆனால்அவர்களைத் தூரமாகப் போய் விடும் படி விரட்டாத குறையாக விரட்டினார் டாக்டர் கலாம்.

அவர் எப்போதும் சொல்லும் "கனவு காணுங்கள் மாணவச் செல்வங்களே, கனவு காணுங்கள்" என்ற அறிவுரையைஇங்கேயும் அவர் கூறத் தவறவில்லை.

ஐடி.காம் கண்காட்சி தொடக்கம்:

முன்னதாக ஆசியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பக் கண்காட்சியான பெங்களூர் ஐடி.காம் கண்காட்சியைடாக்டர் கலாம் தொடங்கி வைத்தார். கண்காட்சியைத் தொடங்கி வைத்து டாக்டர் கலாம் பேசுகையில்,

இந்தியாவில் சாப்ட்வேர் வளர்ச்சி தொடர்ந்து நன்றாகவே உள்ளது. ஆனால் அது மட்டும் நாட்டின் வளர்ச்சிக்குப்போதாது. சாப்ட்வேர் வளர்ச்சியைக் கொண்டு எதிர்காலத்தை நிர்ணயித்து விட முடியாது.

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு சாப்ட்வேர் துறையில் சரிவு ஏற்பட்டது என்னவோ உண்மை தான். ஆனால்இந்திய சாப்ட்வேர் கம்பெனிகள் தாக்குப் பிடித்து ஓரளவு முன்னேறி விட்டன என்றே கூறலாம்.

ஆனால் சாப்ட்வேர் துறையை வைத்துக் கொண்டு எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாது என்பதை இந்தஅனுபவத்தின் மூலம் அந்தக் கம்பெனிகள் புரிந்து கொண்டுள்ளன.

எனவே ஹார்டுவேர், டிசைன் உள்ளிட்ட மற்ற பிரிவுகளிலும் முன்னேறிச் சாதிக்க வேண்டும்.

பொருளாதாரத்தை வளப்படுத்துவதன் மூலமாகவே இந்தியா ஒரு "வளர்ந்த நாடாக" உருவாக முடியும். அதற்கானஇந்தியர்களாகிய நாம் அனைவருமே வியர்வை சிந்தி உழைக்க வேண்டியதைத் தவிர வேறு வழியே இல்லை.

நாட்டில் ஓடும் அனைத்து நதிகளையும் இணைப்பதன் மூலமே மாநிலங்களுக்கிடையே நதி நீர் பங்கீட்டுப்பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். மேலும் ஒரு பக்கம் வெள்ளம், மறு பக்கம் வறட்சி என்ற கொடுமையையும்போக்கிவிட முடியும்.

எனவே நதிகளை இணைப்பதும் தற்போதுள்ள சூழ்நிலையில் மிக மிக அவசியமாகிறது.

நாட்டில் வளர்ச்சியும் அமைதியும் ஒரே பாதையில் ஒன்றாகவே செல்ல வேண்டும். இந்தியாவின்ஒவ்வொருவருக்கும் தேசிய குடியுரிமை வழங்கப்படுவதும் மிகவும் அவசியம் என்றார் கலாம்.

இந்தக் கண்காட்சித் தொடக்க விழாவில் கர்நாடக ஆளுநர் சதுர்வேதி, முதல்வர் கிருஷ்ணா, ஆந்திர முதல்வர்சந்திரபாபு நாயுடு, இங்கிலாந்து ஈ-காமர்ஸ் அமைச்சர் ஸ்டீபன் டிம்ஸ், மொரீஷியஸ் தகவல் தொழில்நுட்பஅமைச்சர் தீல்சந்த் ஜீஹா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இன்று முதல் ஐந்து நாட்கள் வரை நடக்கும் இந்தக் கண்காட்சியை கர்நாடக அரசும் சாப்ட்வேர் டெக்னாலஜிபார்க்ஸ் ஆப் இந்தியா நிறுவனமும் இணைந்து இந்தக் கண்காட்சியை நடத்துகின்றன.

உலகம் முழுவதிலுமிருந்து வரும் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் இந்தக் கண்காட்சியைக் கண்டுகளிக்கவுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த இந்தக் கண்காட்சியை 15 நாடுகளைச் சேர்ந்த 2.45 லட்சம் பேர்கண்டுகளித்தனர்.

இந்தக் கண்காட்சியில் 17 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனங்கள்பங்கேற்கின்றன.

இந்தக் கண்காட்சியால் சுமார் 250 மில்லியன் டாலருக்கும் மேல் வர்த்தகம் நடைபெறும் என்றுஎதிர்பார்க்கப்படுவதாக கர்நாடக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் இனாம்தார் கூறினார்.

Sᶵz -70; Ea }vࠓ B

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X