கோவை அருகே 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 33 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோவில்பாளையம் அருகே அரசு பஸ்சும் தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 21 பெண்கள்உள்பட 33 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோயம்புத்தூரிலிருந்து இன்று காலை அன்னூர் நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. எதிர்த் திசையில்வெள்ளமடையிலிருந்து தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
கோவில்பாளையம் அருகே சத்தியமங்கலம் ரோட்டில் படு வேகமாக வந்து கொண்டிருந்த இந்த இரண்டுபஸ்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதின.
மோதிய வேகத்தில் இரண்டு பஸ்களின் முன் பகுதியும் சுக்கு நூறாக நொறுங்கி விட்டன.
இந்தப் பயங்கரமான விபத்தில் 21 பெண்கள் உள்பட 33 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும்கோவில்பாளையத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.












Click it and Unblock the Notifications