கேரளாவிலிருந்து சென்னை வந்து "கைவரிசை" காட்டிய திருட்டு கும்பல்
சென்னை:
தீபாவளி கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பெண்களிடம் சங்கிலிப் பறிப்பு, பிக் பாக்கெட் ஆகியவற்றில் ஈடுபட்டகேரளாவைச் சேர்ந்த 3 பேர் கொண்ட திருட்டுக் கும்பலைப் போலீஸார் கைது செய்தனர்.
தீபாவளி நெருங்குவதையொட்டி சென்னையில் வியாபாரம் களை கட்டி வருகிறது. மையப் பகுதியான தி. நகரில்கட்டுக்கடங்காத கூட்டம் கூடுகிறது.
இது திருடர்களுக்கு ரொம்பவும் வசதியாகப் போய் விட்டது.
இதையடுத்து போலீஸார் மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கண்காணிப்புக் கோபுரம்அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போலீஸாரின் தீவிர கண்காணிப்பு காரணமாக 3 பேர் கொண்ட கேரள திருட்டுக் கும்பல்பிடிபட்டுள்ளது.
இவர்கள் ரபி, கிளமன்ட், மது என்பதும் கொச்சியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
இவர்களோடு மேலும் சிலர் திருடுவதற்காகவே கொச்சியிலிருந்து வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.அவர்களையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.
Bsimi-96;-96;A nmh 11 ]_UPЦlt;/b>
-->


