கொளத்தூர் மணியின் ஜாமீன் மனு தள்ளுபடி
மைசூர்:
பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவரான கொளத்தூர் மணியின் ஜாமீன் மனு மைசூர் நீதிமன்றத்தில் தள்ளுபடிசெய்யப்பட்டது.
சந்தனக் கடத்தல் வீரப்பன் கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கடத்திக் கொண்டு போய் 60 நாட்களுக்குமேல் ஆகிவிட்டன.
இந்நிலையில் கொளத்தூர் மணியையும் கொள்ளேகால் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் பொன்னாச்சிமகாதேவசாமியையும் தூதர்களாக காட்டுக்குள் அனுப்ப வேண்டும் என்று வீரப்பன் கேசட் அனுப்பியிருந்தான்.
ஆனால் கொளத்தூர் மணி சிறையில் இருப்பதால் அவரைத் தூதராக அனுப்புவதில் சிக்கல் உள்ளதாக வானொலிமூலம் வீரப்பனுக்குத் தகவல் அனுப்பப்பட்டது.
மேலும் கொளத்தூர் மணிக்கு ஜாமீன் கிடைத்தால் மட்டுமே அவரைத் தூதராக அனுப்புவது குறித்துமுடிவெடுக்கப்படும் என்றும் கர்நாடக அரசு அறிவித்தது.
மைசூர் நீதிமன்றத்தில் மட்டும் கொளத்தூர் மணி மீது இரண்டு வழக்குகள் உள்ளன. அதில் ஒன்றில் சமீபத்தில்அவருக்கு ஜாமீன் கிடைத்து விட்டது.
இந்நிலையில் மற்றொரு வழக்கில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தது. ஆனால் அம்மனுதள்ளுபடி செய்யப்பட்டது.
இவ்வழக்கில் சாம்ராஜ் நகர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்து விட்டுத் தான் இங்கு வரவேண்டும். நேரடியாக செசன்ஸ் கோர்ட்டுக்கு வந்ததால் இம்மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி கூறினார்.
இதையடுத்து நாகப்பாவை மீட்க காட்டுக்குள் தூதரை அனுப்புவது குறித்து மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.வீரப்பனிடமிருந்து எந்தவிதமான தகவலும் இல்லை.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications