For Quick Alerts
For Daily Alerts
Just In
பதபதத்த பட்டாசுகள்.. பதைபதைக்கும் வியாபாரிகள்
சென்னை:
தமிழகத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக பட்டாசு விற்பனை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் பட்டாசு வியாபாரிகள் வெறுத்துப் போயுள்ளனர்.
தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தை கன மழை திணறடித்து வருகிறது. இதனால்தீபாவளி விற்பனை டல் அடிக்க ஆரம்பித்துள்ளது.
இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது பட்டாசு வியாபாரிகள்தான். சாலையோரங்களில் போட்டு வைத்திருந்த பலபட்டாசுக் கடைகள் கன மழையில் உருத்தெரியாமல் போய் விட்டன.
கோடிக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகள் பதபதத்துப் போய் விட்டதால் வியாபாரிகள் நொந்து போயுள்ளனர்.
சென்னையைப் பொறுத்தவரை ஆதம்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், கொளத்தூர், அம்பத்தூர், முகப்பேர்போன்ற பகுதிகள் தண்ணீரில் மிதப்பதால் இந்த முறை அந்தப் பகுதிகளில் பட்டாசுகள் வாங்குவதற்கு ஆளேஇல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
-->


