அறந்தாங்கியை அலற வைத்த "ஸ்பீட்" பஸ்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் டிப்போவுக்குள் நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ்சை திருட்டுத்தனமாகஎடுத்த வாலிபர் அதை தாறுமாறாக ஓட்டிச் சென்றதால் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பல சாலைகளில் குண்டக்க மண்டக்க ஓடிய அந்த பஸ் கடைசியில் ஒரு பெரிய சுவரில் மோதிய பிறகு தான்நின்றது. வழியில் பஸ் மோதியதில் பலர் காயமடைந்தனர். இருவர் பலத்த காயமடைந்தனர்.
அறந்தாங்கி டிப்போவில் டவுன் பஸ்கள் நறுத்தப்பட்டிருந்தன. நள்ளிரவுக்கு மேல் டிப்போவுக்குள்திருட்டுத்தனமாக நுழைந்த ஒரு வாலிபர், பஸ் ஒன்றைக் கிளப்பிக் கொண்டு வெளியே வந்தார். பிறகு அதைதாறுமாறாக ஓட்டினார்.
நள்ளிரவு நேரத்தில் அரசு பஸ் தாறுமாறாக வருவதை பார்த்த பலரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.காயமடைந்த சிலர் வேறு வாகனங்கள் மூலம் பஸ்சைத் துரத்தினர்.
இதைப் பார்த்த பஸ் வாலிபர், இன்னும் வேகமாக ஓட்டினார். இதில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 2 பேர் மீதுபஸ் மோதியதில் அவர்கள் படுகாயமடைந்தனர்.
இறுதியில், வீரமாகாளி அம்மன் கோவில் தெருவை அடைந்ததும் பஸ் சுவற்றில் மோதி நின்றது. இதைத் தொடர்ந்துஅந்த வாலிபரும் இறங்கி ஓடி விட்டார்.
தகவல் அறிந்து வந்த போக்குவரத்து டிப்போ மேலாளர் தங்கராஜ் மற்றும் போலீசார் பஸ்ஸை மீட்டு எடுத்துச்சென்றனர்.
பஸ்சை கடத்திய வாலிபர் தப்பிவிட்டதால் அவர் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. தீபாவளியையொட்டிபுல் மப்பில் உள்ளூர் வாலிபர் தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.
-->


