காவல் நிலைய வாசலில் படுகொலை: 5 பேருக்கு ஆயுள்
சென்னை:
சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையம் முன்பு குற்றவாளி ஒருவரை வெட்டிக் கொன்ற 5 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி என்ற இடத்தில் கடந்த 1996ம் ஆண்டு தொப்பையா என்பவரது தலைமையிலானகும்பலால், சிவன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரும் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக தொப்பையாஉள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். ஒரு நாளைக்கு இரண்டு முறை சைதாப்பேட்டைகோர்ட்டில் கையெழுத்திட வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
96ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி தொப்பையாவும், பிறரும் கையெழுத்திட வந்தபோது, காவல் நிலைய வாசலில்சிவனுடைய மகன்கள் கலைமணி, சுப்பையா மற்றும் ராஜாமணி, சங்கரன், கந்தசாமி ஆகியோர் தொப்பையாவைவழிமறித்து சரமாரியாக வெட்டித் தள்ளினார்கள்.
இதில் தொப்பையா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுதொடர்பாக 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான விசாரணை முதலாவது கூடுதல் செஷன்ஸ்நீதிபதி அக்பர் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது.
-->


