For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுப் பொலிவு பெற்ற மீனாட்சி அம்மன் ஆலய மண்டபம்

By Staff
Google Oneindia Tamil News

மதுரையின் மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபம் புதுப் பொலிவுடன் சுற்றுலாப் பயணிகளைவரவேற்கத் தயாராகி விட்டது.

Thousand Pillars Hallமீனாட்சி அம்மன் கோவில் வளாகத்திற்குள் அமைந்துள்ள இந்த ஆயிரங்கால் மண்டபம் தமிழகத்தின் பண்டையகட்டிடக் கலையின் பெருமையை உணர்த்துவதாக உள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக இந்த மண்டபம் பராமரிப்பில்லாமல் இருந்தது.

பல்வேறு கோரிக்கைகள், போராட்டங்களை அடுத்து இந்த மண்டபம் சமீபத்தில் புனரமைக்கப்பட்டுள்ளது. ரூ. 15லட்சம் செலவில் மண்டபம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்த புதுப்பிக்கப்பட்ட மண்டபம் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு திறந்துவிடப்படும்.

இந்த மண்டபத்தில் இப்போது கூடுதலாக பல விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால் மண்டபமே விளக்கொளியில்ஜொலிக்க ஆரம்பித்துள்ளது.

ஆயிரங்கால் மண்டம் என்று அழைக்கப்பட்டாலும் கூட இதில் இருப்பவை மொத்தம் 985 தூண்கள். ஒவ்வொருதூணிலும் பலவிதமான சிற்பங்கள், கதை விளக்கும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

இந்தத் தூண்களில் 5000க்கும் மேற்பட்ட சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தச் சிற்பங்களையும் ஓவியங்களையும் பார்வையாளர்கள் ஆர்வம் காரணமாக தொட்டுப் பார்ப்பதால் அவைசேதமைடையத் துவங்கியுள்ளன. இந் நிலையில் இப்போது இந்தத் தூண்களை யாரும் தொடாத வகையில்இரும்புத் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

1200 கால மதுரை வரலாற்றையும் திராவிட கட்டடக் கலையையும் பெருமையுடன் எடுத்துக் கூறுகிறது இந்த மண்டபம்.

இந்த மண்டபத்தின் ஒவ்வொரு தூணும் ஒரு ஒலியை எழுப்பும் விதத்தில் செதுக்கப்பட்டுள்ளன என்பது இதன் இன்னொருசிறப்பம்சமாகும்.

புதுப்பிக்கப்பட்ட இந்த மண்டபத்தை சபாநாயகர் காளிமுத்து, இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமி,மதுரை கலெக்டர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நாளை திறந்து வைக்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X