For Quick Alerts
For Daily Alerts
Just In
மதுரையில் சங்கராச்சாரியார், ஜெ. கொடும்பாவிகள் எரிப்பு: 4 தலித்கள் கைது
மதுரை:
மதுரையில் காஞ்சி சங்கராச்சார் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் கொடும்பாவிகளை தலித் அமைப்பினர் எரித்தனர்.
மத மாற்றத் தடைச் சட்டத்தை ஆதரித்து வரும் காஞ்சி சங்கராச்சாரியார் தலித்களுக்கு எதிராக சில கருத்துக்களைத்தெரிவித்தாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு எதிராக புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறுதலித் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதற்கிடையே மதுரையில் சங்கராச்சாரியாரின் கொடும்பாவிகளை புரட்சி வேங்கைகள் அமைப்பைச் சேர்ந்த வாலிபர்கள் இன்றுஎரித்தனர். மத மாற்றத் தடை சட்டத்தை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதாவின் கொடும்பாவிகளையும் அவர்கள் எரித்தனர்.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்த அந்த கொடும்பாவிகளை நீர் ஊற்றி அணைத்தனர். இது தொடர்பாக புரட்சி வேங்கைகள்அமைப்பைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-->


