For Daily Alerts
Just In
நெரிசலை தவிர்க்க சென்னையிலிருந்து பெங்களூர், திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்கள்
சென்னை:
பயணிகளின் நெரிசலைத் தவிர்ப்பதற்காக சென்னையிலிருந்து பெங்களூக்கும் திருவனந்தபுரத்திற்கும் வரும் 24ம்தேதி சிறப்பு ரயில்கள் விடப்படுகின்றன.
பெங்களூர் செல்லும் சிறப்பு ரயில் அன்று இரவு 9 மணிக்கு சென்னை-சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பிமறுநாள் காலை 4 மணிக்கு பெங்களூர் சென்றடையும்.
மற்றொரு சிறப்பு ரயில் சென்னையிலிருந்து அதே நாள் பகல் 12.30 மணிக்குக் கிளம்பி மறுநாள் காலை 7 மணிக்குதிருவனந்தபுரதிற்குச் சென்று சேரும்.
இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு கூட இன்று தொடங்கி விட்டதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளசெய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-->


