தமிழகத்தில் 2 விபத்துக்கள்: 3 டிரைவர்கள் உள்பட 4 பேர் பலி
கரூர் - சங்ககிரி:
தமிழகத்தில் கரூர் மற்றும் சங்ககிரி அருகே நடந்த 2 சாலை விபத்துக்களில் 3 டிரைவர்கள் உள்ளிட்ட 4 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கரூர் அருகே மணல் ஏற்றி சென்று கொண்டிருந்த ஒரு லாரியும், கோழிகளை ஏற்றிக் கொண்டு சென்ற மற்றொருலாரியும் நேருக்கு நேர் இன்று காலை பயங்கரமாக மோதிக் கொண்டன.
இதில் இந்த இரண்டு லாரிகளின் டிரைவர்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் சிலர்காயமடைந்தனர்.
இதற்கிடையே சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஒரு மினி லாரியும் அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் லாரியின் டிரைவரும் அவருக்கு அருகில் உட்கார்ந்து இருந்தவரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி இறந்தனர்.
இறந்த இந்த இரண்டு பேரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
இந்த விபத்துக்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்கள்மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-->


