"கருணாநிதிக்கு உலக மகா புளுகர் பட்டம்": ராம கோபாலன் யோசனை
ஒசூர்:
திமுக தலைவர் கருணாநிதிக்கு உலக மகா புளுகர் பட்டம் வழங்குவது குறித்து யோசித்து வருகிறோம் என்று இந்துமுன்னணியின் மாநில அமைப்பாளரான ராம கோபாலன் கூறினார்.
இது தொடர்பாக ஒசூரில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
இந்துக்களை திருடர்கள் என்று கருணாநிதி வர்ணித்துள்ளார். இந்து மதத்தைப் பற்றி அவரிடம் யாரும் விளக்கம்கேட்கவில்லை.
அவராகவே இந்துக்களைப் பற்றிப் பேசுவதும், பிறகு சப்பைக் கட்டுக் கட்டி விளக்கம் அளிப்பதும்வாடிக்கையாகிவிட்டது.
மதமாற்றத் தடைச் சட்டத்தை ஆதரித்து காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் பிரச்சாரம் செய்தார்.ஆனால் அவரைத் தனிப்பட்ட முறையில் கருணாநிதி விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலை தொடர்ந்தால் நாங்களும் கருணாநிதியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சனம் செய்ய வேண்டிவரும்.
திமுகவை குழி தோண்டிப் புதைக்க முயற்சி செய்து வரும் கருணாநிதிக்கு இந்து முன்னணி சார்பில் "உலக மகாபுளுகர்" பட்டம் வழங்கலாமா என்பது குறித்து யோசித்து வருகிறோம்.
தமிழக அரசின் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் எதிர்த்துப் போராட்டம்நடத்தி வருகின்றனர். அந்த எதிர்ப்பே அவர்களுக்கு எதிராகத் தான் அமையும் என்றார் ராம கோபாலன்.
-->


