"தேளுக்கு அதிகாரம் கொடுத்தால் கொட்டத் தான் செய்யும்": கருணாநிதி
சென்னை:
திமுகவின் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதற்கு அக்கட்சியின்தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் ஐ. பெரியசாமி ஆகியோர்வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடியாகச் சோதனை நடத்தினர்.
இது தொடர்பாக சென்னையில் இன்று நிருபர்களிடம் கருணாநிதி பேசுகையில், அரசியல் பழிவாங்கும்நோக்கத்துடனேயே அதிமுக இந்தச் சோதனைகளை நடத்த உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்தச் சோதனைகளைக்கண்டெல்லாம் நாங்கள் பயந்துவிட மாட்டோம்.
தேளுக்கு அதிகாரத்தைக் கொடுத்தால் அது மற்றவர்களைக் கொட்டத் தான் செய்யும். அது போலத் தான்அதிமுகவுக்கு மக்கள் அதிகாரத்தைக் கொடுத்தார்கள். அந்த அரசும் சோதனைகள் என்ற பெயரில் மக்களையும்முன்னாள் திமுகவினரையும் துன்புறுத்தி வருகிறது.
தமிழகத்தில் தீவிரவாதம் தலைதூக்கி இருக்கிறது. அதை திசை திருப்பவே இந்த ரெய்ட் நடந்து வருகின்றன.சட்டரீதியில் சோதனை நடத்தியுள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள். அதை சட்டரீதியில் திமுகவினரும் சந்திப்பார்கள் என்றார்கருணாநிதி.
"இலக்கணமில்லா கவிதை..."- துரைமுருகன்:
இதற்கிடையே முன்னாள் திமுக அமைச்சரான துரைமுருகனும் இந்தச் சோதனை நடவடிக்கைகளை நக்கலுடன்கண்டித்தார்.
அன்பழகனின் வீட்டில் ரெய்ட் நடந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த துரைமுருகன், தமிழகத்தை ஆளும் இந்தஅரசு எதை வேண்டுமானாலும் செய்யும். அதிமுக அரசு ஒரு இலக்கணமில்லாத கவிதை மாதிரி என்றார்சிரித்தவாரே.
ஸ்டாலின்:
அப்போது அங்கு வந்த சென்னை மாநகர முன்னாள் மேயரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான ஸ்டாலின்நிருபர்களிடம் கூறுகையில்,
"இது என்ன புதுசா? ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பதவிக்கு வந்த நாளிலிருந்தே எப்படிச்செயல்படுகிறதோ, அப்படியே தான் இப்போதும் செயல்படுகிறது. புதிதாக ஒன்றும் நடக்கவில்லை. வேற என்னத்தசொல்ல?" என்றார் சிரித்துக் கொண்டே.
அன்பழகன்:
இதற்கிடையே தன் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட பின்னர் நிருபர்களிடம் அன்பழகன் பேசுகையில்,
மருத்துவக் கல்லூரியில் இடம் கேட்டு ஒரு மாணவி என்னிடம் வந்ததாகவும் ஆனால், அவருக்கு இடம்கிடைக்காததால் அவர் கொடுத்த தவறான புகாரின் அடிப்படையிலேயே தற்போது சோதனைநடத்தப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
இது எல்லாம் அமைச்சரிடமே வராது. கல்வித்துறை இயக்குனர் அளவிலேயே முடிந்துவிடும். இதில் அமைச்சருக்குஎந்தக் கட்டுப்பாடும் இல்லை. மார்க் இருந்தால் சீட் தருவார்கள்.
முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தான் இந்த ரெய்ட் நடக்கிறது. வீட்டில் உள்ள ஏ.சி, பிரிட்ஜ்,டிவி, கட்டில், நாற்காலி, பீரோக்களின் கணக்கை எடுத்தார்கள்.
வீட்டில் இருந்த 10, 12 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டார்கள். இந்த சவாலை சட்டப்படி சந்திப்பேன்.பொய்யான புகாரின் அடிப்படையில், இல்லாத ஆதாரத்தைத் தேடி சோதனையை நடத்தியுள்ளார்கள்.
ஜெயலலிதா முதல்வராக வந்தது முதல் இது தொடர்கிறது. எனவே இப்போது நடந்துள்ள சோதனை ஆச்சரியம் தரவில்லை. திமுகமுன்னணித் தோழர்களின் வீடுகளில் சோதனை நடத்த வேண்டும் என்ற ரீதியில் இந்த சோதனையை நடத்தியுள்ளார்கள்.
அவர்கள் எத்தனை சோதனை நடத்தினாலும், எத்தனை வழக்குகளைப் போட்டாலும் சட்டரீதியில் சந்திக்க நான் தயார் என்றார்அன்பழகன்.
ஆற்காடு வந்தார்:
அன்பழகனின் வீட்டில் ரெய்ட் நடப்பதை அறிந்த கட்சியின் பொருளாளர் ஆற்காடு வீராசாமியும் அங்கு வந்தார். அன்பழகனிடம்சிறிது நேரம் பேசிவிட்டுச் சென்றார்.
நீங்க டீ குடிங்க.. நேரு:
திருச்சியில் தில்லை நகரில் கே.என். நேருவின் வீட்டில் ரெய்ட் நடப்பதை அறிந்த ஏராளமான திமுகவினர் அங்கு குவிந்தனர்.அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த நேரு நிருபர்களிடம் வந்து பேசுகையில், இது எல்லாம் ஒரு விஷயமே இல்லை. இதை நான்எதிர்பார்த்துக்கிட்டு தான் இருந்ததேன். நீங்க டீ சாப்பிடுங்க என்று டீயை பரிமாறி தானும் அருந்திவிட்டு ஜாலியாக ஜோக்அடித்துக் கொண்டிருந்தார்.
-->


