For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அன்பழகன், நேரு, பெரியசாமி, பினாமிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை, திண்டுக்கல் & திருச்சி:

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், முன்னாள் திமுக அமைச்சர்களான ஐ. பெரியசாமி மற்றும் கே.என். நேருஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர்.

காலை 9 மணிக்குத் தொடங்கிய இந்த ரெய்ட் தொடர்ந்து நடந்து வருகிறது. டி.எஸ்.பி. பாண்டியன் தலைமையில் 6போலீசார் இந்த சோதனையை நடத்தினர்.

கடந்த சில மாதங்களாகவே முன்னாள் திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட அந்தக் கட்சி பிரமுகர்களின் வீடுகளில் லஞ்சஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இன்று காலை அன்பழகனின் கீழ்பாக்கம் ஆஸ்டின் கார்டன் வீட்டிலும், அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ளவீட்டிலும் சோதனை தொடங்கியது. இது குறித்துத் தகவல் அறிந்தவுடன் மு.க. ஸ்டாலினும் துரைமுருகனும்அன்பழகனின் வீட்டுக்கு வந்தனர்.

அவர்களை போலீசார் உள்ளே விடவில்லை. ஆனால், சாந்தி காலனி வீட்டில் இருந்த அன்பழகன் வெளியே வந்துஅவர்களைச் சந்தித்துவிட்டுப் போனார்.

திமுக ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்த அன்பழகன் மீது ஒரு மாணவி கொடுத்த புகாரின் பேரில் இந்தசோதனைகள் நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத ஒரு மாணவிஅது குறித்து வழக்குப் போட்டதாகவும் அதையடுத்தே இந்த சோதனை நடப்பதாகவும் போலீசார் கூறினர்.

மேலும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு அனுமதி தருவதிலும் திமுக ஆட்சியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகத்தெரிகிறது.

அது தொடர்பான ஆவணங்களையும் அன்பழகனின் வீடுகளில் போலீசார் தேடினர்.

அதிகாரிகள் வீடுகளிலும்...

அதே நேரத்தில் கல்வித்துறையைச் சேர்ந்த 2 அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனை நடந்தது. ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின்இயக்குனராக உள்ள மதுரை சுதர்சனத்தின் தல்லாகுளம் வீட்டிலும், அன்பழகனுக்கு நெருக்கமாக இருந்த கல்வித்துறை அதிகாரிகண்ணனின் சென்னை தி.நகர் பிளாட்டிலும் சோதனை நடந்தது.

திருச்சியில்...

அதே போல மற்றொரு திமுக அமைச்சரான நேருவின் திருச்சி, சென்னை வீடுகளிலும் அவர்களது உறவினர்களின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார்சோதனை நடத்தினர்.

உணவுத் துறை அமைச்சராக இருந்த நேருவுக்குச் சொந்தமான 14 இடங்களில் இந்த அதிரடி ரெய்ட் நடந்தது. திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என். நேருவின்வீட்டில் காலை 9 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஈஸ்வரமூர்த்தி தலைமையில் சென்ற அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தினர்.

அதே நேரத்த்தில் ஏ.எஸ்.பி. ஜெயபால் தலைமையிலான அதிகாரிகள் அவருக்குச் சொந்தமான வேறு வீடுகளில் சோதனையிட்டனர்.

நேருவின் தம்பி மணியின் வீடு, தம்பியின் மாமனார் வீடு, லால்குடியில் உள்ள நேருவின் பண்ணை வீடு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீடு, திருப்பூர்,திருவானைக்காவல் ஆகிய இடங்களில் உள்ள அவரது வீடுகளிலும் சோதனை நடந்தது.

நடிகர் நெப்போலியனின் மாமா தான் கே.என். நேரு என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கலில்..

அதே போல திமுக ஆட்சியில் ஊரகத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமியின் வீடுகளிலும் சோதனை நடந்தது.

திண்டுக்கல்லில் உள்ள அவருடைய வீட்டிலும் அவருக்குச் சொந்தமான 14 இடங்களிலும் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைமேற்கொண்டனர்.

பெரியசாமியின் பினாமியாகக் கருதப்படும் அவரது முன்னாள் உதவியாளர், முன்னாள் டிரைவரின் வீட்டிலும் சோதனை நடந்தது.

பெரியசாமிக்கு நெருக்கலமான திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் ஜோதீஸ்வரன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைநடத்தினர்.

பெரியசாமியின் ஆதரவாளரான திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளரின் வீட்டிலும், ஒட்டன்சத்திரத்தில் உள்ள அவரது பினாமிகள் இருவரது வீட்டிலும்சோதனை நடந்தது. பெரியசாமியின் பணணை வீட்டிலும் இச் சோதனை நடந்தது.

இந்த முன்னாள் அமைச்சர்களின் வீடுகளிலிருந்து ஆவணங்கள் ஏதும் சிக்கியதா என்பது குறித்து இன்று மாலை தெரிய வரும்.

மொத்தம் தமிழகம் முழுவதும் 32 இடங்களில் இந்தச் சோதனைகள் நடக்கின்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னாள் திமுக அமைச்சர்கள் பதவியில் இருக்கும் போது ஏராளமான சொத்துக்களைக் குவித்ததற்கான பல ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும்,இந்தச் சோதனைகளில் எந்தவிதமான அரசியல் நெருக்குதலும் இல்லை என்றும் லஞ்ச ஒழிப்பு ஐ.ஜி. திலகவதி கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் முன்னாள் திமுக அமைச்சர்கள் செல்வராஜ், ஜெனிபர் சந்திரன், பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், சமயநல்லூர் செல்வராஜ்,எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அந்தியூர் செல்வராஜ், மதுரை மாநகர முன்னாள் மேயர் குழந்தைவேலு ஆகியோர் வீடுகளில் சோதனை நடைபெற்றது.அப்போது ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாகப் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் கடந்த மாதம் திமுக தலைவர் கருணாநிதியின் வலது கரமான அமைச்சர் துரைமுருகனின் வீடுகளிலும், அவருடைய உறவினர்களின் வீடுகளிலும் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களைக் கைப்பற்றினர்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X