மதமாற்ற சட்டத்துக்கு உடனே ஒப்புதல் தர வேண்டும்: ஆளுநரிடம் கோரிக்கை
சென்னை:
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் தருமாறு இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள்தமிழக ஆளுநரை வலியுறுத்தின.
இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் தலைமையில் விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., ஏ.பி.வி.பி.உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆளுநர் ராமமோகன் ராவை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர்.
அப்போது கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஜாதி பாகுபாடு காரணமாக மதமாற்றம் நடப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. காரணம், கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாழ்த்தப்பட்டவர்கள், தங்களை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் தான் சேர்க்கக் கோருகிறார்கள்.
வெறும் கிறிஸ்தவர்களாக தங்களை அவர்கள் அடையாளம் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை. இதன் மூலம்இந்து தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகளை அனுபவிக்க விரும்புகிறார்கள். எனவே மதம் மாறியபிறகும் அவர்கள் தங்களது ஜாதி அடையாளத்தை விடுவதில்லை.
அதே போல உயர் ஜாதி கிறிஸ்தவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கு பெண்கொடுப்பதில்லை. திருமண உறவும் வைத்துக் கொள்வதில்லை.
இந்த நிலையில் ஜாதி அடிப்படையில் மதமாற்றம் நடைபெறுவதாக எப்படிக் கூற முடியும். மூளைச் சலவை மூலமேமதமாற்றம் நடைபெறுகிறது என்பதே உண்மை என்றனர்.
-->


