கொளத்தூர் மணியை வெளியே விட்டால் ஆபத்து: சுவாமி எச்சரிக்கை
மதுரை:
கர்நாடக சிறையில் உள்ள பெரியார் திராவிட இயக்கத் தலைவரான கொளத்தூர் மணிக்கு ஜாமீன் வழங்கிவெளியே அனுப்பினால் நாட்டிற்கே ஆபத்து ஏற்படும் என்ற ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமிகூறினார்.
வீரப்பனிடம் தூது அனுப்புவதற்காக கொளத்தூர் மணியை விடுவிக்கும் முயற்சிகளில் கர்நாடக அரசு தீவிரமாகஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக மதுரையில் நிருபர்களிடம் சுவாமி பேசுகையில்,
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் கொளத்தூர் மணிக்கும் முக்கியப் பங்கு இருப்பதாகஅவ்வழக்கை விசாரித்து வரும் ஜெயின் கமிஷன் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொளத்தூர் மணியை ஜாமீனில் விடுவித்து வெளியே அனுப்பினால் அதைவிட வேறு ஆபத்தேகிடையாது.
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை வீரப்பனிடமிருந்து மீட்க வேண்டுமானால் காட்டுக்குள் கமாண்டோபடைகளை அனுப்பி அதிரடித் தாக்குதலை நடத்த வேண்டும். அவனுடைய மிரட்டல்களுக்கு எந்த அரசும் பணியக்கூடாது.
தமிழகத்தில் சமீப காலத்தில் நக்சல்கள், தீவிரவாதிகள் சிக்கியிருப்பது மாநிலத்தில் தீவிரவாத நடமாட்டம்அதிகமாகியுள்ளதையே காட்டுகிறது.
ஆந்திராவின் மக்கள் போர்க் குழு, நக்சல்கள், வீரப்பன், லஷ்கர்-ஏ-தொய்பா உள்ளிட்ட பல தீவிரவாதிகளுடன்சேர்ந்து இந்தியாவுக்குள் பாகிஸ்தான் தீவிரவாதத்தைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறது.
பாகிஸ்தான், பங்களாதேஷ் எல்லைகளில் உள்ள சுமார் 150 பயங்கரவாத முகாம்களை உடனடியாக வெடிகுண்டுவீசித் தகர்த்து எறிய வேண்டும் என்றார் சுவாமி.
-->


