For Quick Alerts
For Daily Alerts
Just In
மதமாற்ற தடை சட்டம்: ஆளுநரிடம் கிறிஸ்தவ அமைப்புகள் மனு
சென்னை:
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டாம் என்று தமிழக ஆளுநர் ராமமோகன் ராவைகிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று கேட்டுக் கொண்டனர்.
தமிழகம், புதுவை பொது நிலையாளர்கள் பேரவை உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகள்இது தொடர்பாக ராமமோகன் ராவிடம் ஒரு மனுவையும் சமர்ப்பித்தனர்.
இது ஒரு கருப்புச் சட்டம் என்பதால் இதற்கு ஒப்புதல் தரக் கூடாது என்று ஆளுநரிடம் அவர்கள் வலியுறுத்தினர்.
பின்னர் குழுவில் இடம் பெற்றிருந்த பிரான்சிஸ் நிருபர்களிடம் கூறுகையில், எங்களது வாதத்தை ஆளுநர்செவிமடுத்துக் கேட்டார். "உடனடியாக ஒப்புதல் தர மாட்டேன். பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டபிறகே நடவடிக்கை எடுப்பேன்" என்று உறுதி கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
முன்னதாக பல சிறுபான்மை அமைப்புகள் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்
-->


