ராஜ்குமாரை மீட்க கருணாநிதி மனைவிக்கு ரூ.2 கோடி: எஸ்.எஸ். சந்திரன் தகவல்
ஈரோடு:
வீரப்பனிடமிருந்து கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக திமுக தலைவர் கருணாநிதியின் மனைவியானராஜாத்தியம்மாளுக்கு ஒரு சினிமா பிரமுகர் மூலம் ரூ.2 கோடி கைமாறியுள்ளது என்று அதிமுக ராஜ்யசபாஎம்.பியான எஸ்.எஸ். சந்திரன் கூறினார்.
ஈரோட்டில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
வீரப்பனிடமிருந்து ராஜ்குமாரை மீட்பதற்காக அவருடைய மனைவி பர்வதம்மாள் ஒரு கோடி ரூபாயைகருணாநிதியின் வீட்டில் ஒப்படைத்ததாக முன்னாள் கர்நாடக டி.ஜி.பி. தினகர் தன் புத்தகத்தில்அம்பலப்படுத்தியுள்ளார்.
அது மட்டுமில்லாமல் ஒரு பிரபல சினிமா புள்ளியின் மூலம் ராஜாத்தியம்மாளிடம் ரூ.2 கோடி வரைகொடுக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.
அந்தப் பணத்தைக் கொடுத்த அந்தப் பிரபலமான சினிமா புள்ளி யார் என்பதை முதல்வர் ஜெயலலிதாவிடம்அனுமதி பெற்ற பின் இதுபோன்ற பொதுக்கூட்ட மேடைகளிலேயே பகிரங்கமாக அறிவிப்பேன் என்றார் சந்திரன்.
-->


