மதமாற்ற தடை சட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம்: இளங்கோவன்
சென்னை:
தமிழக அரசு அமல்படுத்தியுள்ள கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து எதிர்ப்போம் என்று தமிழககாங்கிரசின் செயல் தலைவர் இளங்கோவன் கூறினார்.
பலத்த எதிர்ப்புகளுக்கிடையே சமீபத்தில் கொண்டுவரப்பட்ட கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு தமிழகஆளுநர் ராமமோகன் ராவ் ஒப்புதல் அளித்து விட்டார். இதைத் தொடர்ந்து அந்தச் சட்டம் அமலுக்கும் வந்துவிட்டது.
இருந்தாலும் இந்தச் சட்டத்தை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும் என்று இளங்கோவன் கூறினார். சென்னையில் இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் அனைத்து மதத்தினரிடையேயும் நிலவும் மத நல்லிணக்கத்தை கெடுத்துசீர்குலைத்து விடும். மத ரீதியிலான மோதல்கள் உருவாகவும் வழி வகுக்கும்.
மதம் மாறுவது என்பது ஒருவருடைய அடிப்படை உரிமை. அதை சட்டம் போட்டு தடுத்து நிறுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
தனி நபரின் இந்த அடிப்படை உரிமையைத் தட்டிப் பறிக்கும் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை காங்கிரஸ்கட்சி தொடர்ந்து எதிர்க்கும்.
தமிழகத்தில் நிர்வாக சீர்கேடும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 20 மாத கால அதிமுக ஆட்சியில்இதுவரை 18 முறை அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்து விட்டது. நான்கு முறை தலைமைச் செயலாளர்கள் மாற்றப்பட்டுவிட்டனர்.
அரசு பஸ்களை தனியார்மயமாக்குவதன் மூலம் ஏராளமான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப அதிமுக அரசுதிட்டமிட்டுள்ளது. ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான சாலைப் பணியாளர்களை இந்த அரசு அனுப்பி விட்டது.
தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் விரைவில் நடைபெறும். அப்போது மக்கள் விரோத ஜெயலலிதாஅரசுக்கு எதிரான போராட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்.
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும். இது தொடர்பாக கம்யூனிஸ்ட் மற்றும் தலித்கட்சிகளுடன் கூடிப் பேசி இறுதி முடிவை அறிவிப்போம் என்றார் இளங்கோவன்.
கலாமிடம் முறையிட யோசனை:
இதற்கிடையே கட்டாய மதமாற்றத் தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி டாக்டர்அப்துல் கலாமை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் நல்லகண்ணுகூறினார்.
இதுதொடர்பாக தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கட்டாய மதமாற்றத்தடை சட்டத்தால மத மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மத நல்லிணக்கத்தை அது குலைத்துவிடும்.
இந்த சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ் ஒப்புதல் கொடுத்து விட்டாலும் கூட இன்னும் கூட காலம்போய் விடவில்லை.
ஜனாதிபதியிடம் நேரில் சென்று சட்டத்தை ஏற்க வேண்டாம் என்று வலியுறுத்தலாம். இந்தச் சட்டத்தை தமிழகஅரசு தயவு செய்து மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் அடுத்த முறையாவது பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் கர்நாடகஅரசுடன் பேச்சு நடத்தி உரிய நீரைப் பெற்று விவசாயிகளுக்கு விமோச்சனம் ஏற்படுத்த அரசு முயற்சி செய்யவேண்டும் என்றார் நல்லகண்ணு.
-->


