For Daily Alerts
Just In
ரஷ்ய அதிபரின் இந்தியப் பயணம் முடிந்தது
டெல்லி:
ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் இன்று தனது இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு ரஷ்யா புறப்பட்டார்.
புடினின் இந்தப் பயணத்தின்போது பல பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளன. மேலும் தீவிரவாதிகள் விஷயத்தில்பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார் புடின்.
இந்திய அணு உலைகளுக்கு தேவையான கருவிகளைத் தரவும், விமானப் படை, கடற்படை, ராணுவத்துக்கு நவீன ஆயுதங்கள் தரவும்ரஷ்யா முன் வந்துள்ளது. இது தொடர்பாக பல ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.
மேலும் பிரதமர் வாஜ்பாயை ரஷ்யாவுக்கு வரவும் புடின் அழைப்பு விடுத்தார். அதை வாஜ்பாய் ஏற்றுக் கொண்டார். அடுத்த ஆண்டில்வாஜ்பாய் மாஸ்கோ செல்வார்.
-->


