For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

126 அடி உயரத்திலிருந்து "சொய்ய்ய்ங்": போலீஸ்காரரின் கின்னஸ் சாதனை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கோயம்புத்தூர் ஆயுதப்படைக் காவலர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சுமார் 126 அடிஉயரத்திலிருந்து கடலில் குதித்து அவர் உலக சாதனை படைத்தார்.

கோயம்புத்தூரில் ஆயுதப்படைக் காவலராகப் பணியாற்றி வருபவர் வேல்முருகன். சாதனை படைப்பதில்தணியாத தாகம் உள்ளவர் இவர். இதுவரை பல்வேறு சாதனைகளை இவர் படைத்துள்ளார்.

இந்த நிலையில் சுமார் 126 அடி உயரத்திலிருந்து கடலில் குதித்து சாதனை படைக்க அவர் திட்டமிட்டார்.

இதற்கு முன்பு 1932ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் லக்கா தர்தா என்பவர் வெறும் உடலுடன்115 அடி உயரத்திலிருந்து கடலில் குதித்து சாதனை படைத்ததுதான் கின்னஸ் சாதனையாக இருந்து வந்தது. இதைமுறியடிக்க முடிவு செய்தார் வேல்முருகன்.

இதைத் தொடர்ந்து சென்னைக்கு வந்தார் வேல்முருகன். காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆசியுடன் சாதனைபடைக்க அவர் திட்டமிட்டார்.

இதையடுத்து துறைமுகத்திற்கு காவல்துறை அதிகாரிகள் புடை சூழ வருகை தந்தார் வேல்முருகன். அவரதுசாதனையை நேரில் பார்ப்பதற்காக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயக்குமார், இணை ஆணையர்சைலேந்திர பாபு ஆகியோரும் வந்திருந்தனர். மேலும் ஏராளமான பொதுமக்களும் அங்கு குழுமியிருந்தனர்.

குதிப்பதற்குத் தயார் ஆன வேல்முருகன் ஒரு கிரேன் மூலம் 126 அடி உயரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.தேவைப்பட்டால் வேல்முருகனைக் காப்பாற்றுவதற்காக கீழே அப்பகுதியைச் சுற்றிலும் படகுகளில் கடலோரக்காவல்படையினர் தயார் நலையில் இருந்தன. அவசரத் தேவைக்கு ஆம்புலன்ஸும் தயாராக இருந்தது.

எல்லாம் தயாரான நிலையில் 126 அடி உயரத்திலிருந்து அப்படியே தலைகுப்புற கடலில் குதித்தார் வேல்முருகன்.சர்ரென்று கீழே வந்த அவர் தண்ணீரில் விழுந்தபோது, கூடியிருந்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

ஆனால் சில விநாடிகளுக்குப் பிறகு தண்ணீர் மட்டத்தை விட்டு வேல்முருகன் மேலே வந்தபோது, அத்தனைபேரிடமும் உற்சாகம் படர்ந்தது. கை தட்டி ஆரவாரத்துடன் வேல்முருகனை வரவேற்றனர்.

விஜயக்குமாரும் அசந்து போய் உடனடியாக வேல்முருகனின் சாதனையை வெகுவாகப் பாராட்டி அவருக்குகைகுலுக்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஆனால் கடல் நீரிலிருந்து மேலே வந்த வேல்முருகன், கால் மற்றும் தொடையில் ஏற்பட்ட ரத்தக் காயம் காரணமாகதிடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து காத்திருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவர் உடனடியாக அப்பல்லோமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

வேல்முருகனின் சாதனைப் பட்டியல்:

  • பெரியாறு அணையிலிருந்து, வைகை அணை வரை 117 கி.மீ தொலைவிற்கு ஆற்றில் இடைவிடாமல் நீச்சலடித்துள்ளார்.
  • 15 கிலோ எடையுடன் தொடர்ந்து 16 மணி நேரம் 100 கிலாமீட்டர் தொலைவிற்கு ஓடியுள்ளார். 4 அடி ஆழமுள்ள தண்ணீரில் 81 அடி உயரத்திலிருந்து குதித்துள்ளார்.
  • 6 கிலோ எடை கொண்ட டம்பிள்ஸ் உடற்பயிற்சிக் கட்டையை 27,000 தடவை தூக்கியுள்ளார். ஒற்றைக் காலில் 81 மணி நேரம் தொடர்ந்து நின்றுள்ளார்.
  • 36 அடி உயரத்திலிருந்து தண்ணீர் குதித்துள்ளார்.
  • 12,000 முறை ஒரே திசையில் கையை சுழற்றியுள்ளார்.
  • அரை அடி உயரமுள்ள மணற்பரப்பில் 36அடி உயரத்திலிருந்து குதித்துள்ளார்.
  • சுதந்திர தின பொன்விழாவை முன்னிட்டு, திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு 117 கிலோமீட்டர் தொலைவிற்கு சுதந்திர ஜோதியை ஏந்தியபடி ஓடியுள்ளார்.
இத்தோடு நிற்காமல், இன்னும் தொடர்ந்து பல்வேறு சாதனைகளைச் செய்வேன் என்று அலட்டிக் கொள்ளாமல்கூறுகிறார் வேல்முருகன்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X