For Daily Alerts
Just In
பொடா: வைகோ வழக்கில் மத்திய, தமிழக அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
பொடா சட்டத்தில் பேச்சு உரிமையைப் பறிக்கும் 21வது பிரிவுக்கு எதிராக வைகோ தாக்கல் செய்த வழக்கில் விளக்கம் கேட்டு மத்தியஅரசுக்கும் தமிழக அரசுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக வைகோ பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பொடா சட்டத்தை ஆதரித்தாலும் அதில்உள்ள பேச்சுரிமையைப் பறிக்கும் பிரிவை எதிர்ப்பதாகக் கூறி வைகோ உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதனால் மத்திய பா.ஜ.க. அரசு வைகோ மீது எரிச்சலைடைந்துள்ளது.
-->


