மத்திய, தமிழக, கர்நாடக அரசுகளுக்கு கோர்ட் நோட்டீஸ்
டெல்லி:
வீரப்பனை உடனடியாகப் பிடிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக மத்திய, தமிழகமற்றும் கர்நாடக அரசுகளுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்ப டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லியைச் சேர்ந்த தனஞ்செயன் செளகான் என்பவர் இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில்,
கொலை, கடத்தல் உள்ளிட்ட 119 வழக்குகளில் சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடப்பட்டு வருகிறான்.
அவனைப் பிடிக்க வேண்டிய கர்நாடக அரசு நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக அவனுக்கு ரூ.20 கோடிகொடுத்ததாக அம்மாநில முன்னாள் டி.ஜி.பி. தினகர் தன்னுடைய புத்தகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ராஜ்குமாரை விடுவிக்க பணம் கொடுக்கப்பட்டதால் தான் தற்போது கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைவீரப்பன் கடத்திக் கொன்று விட்டதாகவும் தெரிகிறது.
இந்தப் பணத்தை யார் கொடுத்தார்கள் என்பதைக் கண்டுபிடித்து, அவர்களைத் தண்டிக்க வேண்டும். இதுதொடர்பாக சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும்.
மக்களின் உயிரைக் காப்பதில் அரசு எந்திரங்கள் தோல்வியடைந்து விட்டன. தமிழக, கர்நாடகஅதிரடிப்படையினரும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காட்டுக்குள் தேடிக் கொண்டிருக்கிறார்களே தவிர,வீரப்பனை இன்னும் பிடிக்கவில்லை.
எனவே வீரப்பனை உடனடியாகப் பிடிக்க உத்தரவிட வேண்டும் என்று தனஞ்செயன் அம்மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய, தமிழக மற்றும் கர்நாடகஅரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மேலும் தினகர் உள்ளிட்ட இரு மாநிலங்களைச் சேர்ந்த பல அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அனைவரும் வரும் ஜனவரி 6ம் தேதிக்குள் பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும்உத்தரவிடப்பட்டுள்ளது.
-->


