For Daily Alerts
Just In
கே.ஏ.எஸ். சேகர் மகள் லாட்டரி ஏஜென்டாக உயர் நீதிமன்றம் தடை
சென்னை:
தமிழக அரசின் ஒட்டுமொத்த லாட்டரிச் சீட்டு ஏஜென்டாக செயல்பட பிரபல லாட்டரிக் கடை அதிபர் கே.ஏ.எஸ்.சேகரின் மகள் ராணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சேகரின் மகள் ராணி சமீபத்தில் தமிழக அரசின் ஒட்டுமொத்த லாட்டரிச் சீட்டு ஏஜென்டாக நியமிக்கப்பட்டார்.
ஆனால் விதிமுறைகளுக்குப் புறம்பாக, முறையாக டெண்டர் விடப்படாமல் ராணி ஒட்டுமொத்த ஏஜென்டாகநியமிக்கப்பட்டுள்ளதாகப் புகார் கூறப்பட்டது.
மேலும் ஏஜென்டாக ராணி செயல்படுவதற்குத் தடை விதிக்கக் கோரி சென்னையச் சேர்ந்த லாட்டரிச் சீட்டு அதிபர்விகாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலசுப்ரமணியம், ராணி ஒட்டுமொத்த ஏஜென்டாக செயல்படுவதற்குஇடைக்காலத் தடை விதித்தார்.
-->


