இந்து மதத்திற்கு மாறும் 5,000 தலித் கிறிஸ்தவர்கள்
சென்னை:
சுமார் 5,000 தலித் கிறிஸ்தவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு மதம் மாற்றும் நிகழ்ச்சிக்கு தலித் இன விடுதலைஅமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த அமைப்பின் தலைவரான டி. பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அடுத்த ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி திருச்சியில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்து மதத்தில் உள்ள ஜாதிப் பாகுபாட்டை அந்த மதத்தில் இருந்து கொண்டே களைந்தெறிய போராடுவோம்.
காஞ்சி மடத்தில் தலித் மக்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க காஞ்சி சங்கராச்சாரியார் முன்வர வேண்டும்.
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் சரியான ஒன்றுதான். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினராக இருந்த தலித் மக்கள்,மதமாற்றத்திற்குப் பிறகு பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக மாறி விடுகின்றனர்.
இதனால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் பறிபோய் விடுகின்றன. இதனால்தான் மீண்டும் இந்துமதத்திற்கே மாற வேண்டிய கட்டாயத்தில் தலித் மக்கள் உள்ளனர் என்றார் பெரியசாமி.
-->


