லாக்கப்பில் அடைக்கப்பட்ட பெண் வக்கீல்: 2 போலீசார் சஸ்பெண்ட்
சென்னை:
சென்னையைச் சேர்ந்த பெண் வக்கீல் டோரத்தி தாமஸ் என்பவரை சட்டவிரோதமாக கைது செய்து காவல்நிலையத்தில் சிறை வைத்த சம்பவத்தில் 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
டோரத்தி தாமஸ் கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி மாலை கைது செய்யப்பட்டார். பின்னர் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் அன்று இரவு முழுவதும் அவர் லாக்கப்பில் அடைக்கப்பட்டிருந்தார். மறுநாள் காலையில்தான்விடுவிக்கப்பட்டார்.
டோரத்தியை போலீஸார் மிரட்டி ஒரு வழக்கு தொடர்பான முக்கிய ஆவணத்தைக் கைப்பற்றி விட்டதாக பெண்வக்கீல்கள் சங்கத் தலைவர் சாந்தகுமாரியிடம் டோரத்தி புகார் கொடுத்தார்.
இந்தப் புகார் மனுவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிக்கு சாந்தகுமாரி அனுப்பிவைத்தார். அதை பொது நலன் மனுவாக கருதி, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி சுபாஷன்ரெட்டி உத்தரவிட்டார்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தைச் சேர்ந்த 2 போலீஸ்காரர்களும் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளதாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் துணை கமிஷனர் சேஷசாயி விசாரணை நடத்துவார் என்றும்தெரிவிக்கப்பட்டது.
-->


