தக்காளி விலை கடும் வீழ்ச்சி
சென்னை:
சென்னை நகரில் தக்காளி விலை கிலோவுக்கு 25 பைசா என்ற அளவிற்கு படு பயங்கரமாக சரிந்துள்ளது.
தக்காளி விலையின் கடுமையான வீழ்ச்சியால் வியாபாரிகள் விரக்தியடைந்துள்ளனர்.
சென்னை நகருக்கு பெரும்பாலும் ஆந்திராவிலிருந்தும், பெங்களூரிலிருந்தும்தான் தக்காளி வருகிறது.
ஆந்திராவில் அமோக விளைச்சல் காரணமாக தக்காளி உற்பத்தி படு பயங்கரமாக அதிகரித்துள்ளது. இதனால்தக்காளி விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஆந்திராவிலிருந்து சென்னைக்கு லாரி லாரியாக தக்காளி வந்து குவிந்து கொண்டே இருக்கிறது.சென்னை கோயம்பேடுக்கு கூடுதலாக தற்போது 75 லாரி தக்காளி வந்துள்ளதாம்.
இதனால் தக்காளியின் விலை கிடுகிடுவென குறைந்துள்ளது. 15 மூடைகள் கொண்ட தக்காளி பெட்டி ரூ.75 வரைவிற்றது. தற்போது இது ரூ.20க்குத்தான் விலை போகிறது. ஒரு கிலோ தக்காளி 25 பைசாவுக்கு விற்கப்படுகிறது.
தக்காளி விலையின் கடுமையான வீழ்ச்சியால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துளளனர். கால் கிலோ தக்காளிவாங்குவதற்கே யோசித்துக் கொண்டிருந்த மக்கள் தற்போது கிலோ கணக்கில் தக்காளியை வாங்கிச் செல்கின்றனர்.
வீடுகளிலும், ஹோட்டல்களிலும் தக்காளிக் குழம்பு, தக்காளிப் பச்சடி, தக்காளிக் குருமா, தக்காளி சாதம் என்று ஒரேதக்காளி மயம்தான்!
பொதுமக்கள் மத்தியில் தக்காளி இவ்வாறு சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தாலும், தக்காளி வியாபாரிகள்இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கூவிக் கூவி தக்காளியை அவர்கள் விற்று வந்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தக்காளியை வாங்க மக்கள் முன்வருவதில்லை.
தக்காளி விலை வீழ்ச்சி இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என்று தெரிகிறது.
-->


