வீரப்பன் விவகாரம்: கைது முயற்சிக்கு தடை கோரி பேராசிரியர் கல்யாணி வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பனிடம் மீட்கச் சென்ற தூதுக் குழுவில் இடம் பெற்றிருந்த கல்யாணியைக் கைது செய்ய தமிழகஅரசு முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில் அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

ராஜ்குமார் மீட்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறி அவரை ஈரோடு மாவட்டம் பங்களாபுதூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி.போலீசாரிடம் ஆஜராகுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரது வீட்டிலும் அவருடன் தூதுக் குழுவில் இடம்பெற்ற புதுவை சுகுமாறனின் வீட்டிலும் போலீசார் ரெய்ட் நடத்தினர்.

இந் நிலையில் தமிழக போலீசாரின் இந்தச் செயலை எதிர்த்து கல்யாணி மனுத் தாக்கல் செய்துள்ளார். மனுவை நீதிமன்றம்விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனுடன் சேர்ந்து காட்டுக்குள் சென்ற கல்யாணி மற்றும் புதுவை சுகுமாறன்இருவரும் காட்டுக்குள் சென்று வீரப்பனுடன் பே ராஜ்குமாரை விடுவித்து அழைத்து வந்தனர்.

முதலில் பழ.நெடுமாறனைக் கைது செய்த அரசு பின்னர் தூதுக் குழுவில் இடம் பெற்ற மற்றவர்களையும் கைது செய்ய முயன்றுவருகிறது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தனது மனுவில் கல்யாணி கூறியிருப்பதாவது:

ராஜ்குமார் மீட்பின்போது, தமிழக , கர்நாடக மாநில அரசுகள் எனக்கு உறுதிமொழிகள் கொடுத்தன. ஆனால், அதை தமிழக அரசுஇப்போது மீறியுள்ளது. இரு மாநில அரசுகளும் எனக்குக் கொடுத்த உறுதிமொழிக் கடிதத்தின் நகல்களை கடந்த நவம்பர் 24ம்தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாபுதூர் இன்ஸ்பெக்டருக்கு அனுப்பினேன்.

இருப்பினும் டிசம்பர் 1ம் தேதி மறுபடியும் எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

டிசம்பர் 4ம் தேதி எனது வீட்டுக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், அரசு கொடுத்த உறுதிமொழி செல்லாது, எனவே விசாரணைக்குவர வேண்டும் என்று மிரட்டிவிட்டுச் சென்றார். எனவே போலீஸ் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கல்யாணி.

மனுவை விசாரித்த நீதிபதி பாலசுப்ரணியம் விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+