""என் பேச்சால் கலவரம் ஏற்பட்டதே இல்லை"": நெடுமாறன் வாக்குமூலம்
திருச்செந்தூர்:
"உள்நாட்டு அமைதியைக் கெடுக்கும் வகையில் நான் பேசியதாக என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால்என் பேச்சு காரணமாக எங்கும் எப்போதும் கலவரமோ, மோதலோ வெடித்ததில்லை" என்று தமிழர் தேசியஇயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.
கடந்த 1992ல் திருச்செந்தூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாகநெடுமாறன் மீது வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான விசாரணை திருச்செந்தூர் நீதிமன்றத்தில் நீதிபதி பால்துரை முன்னிலையில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நெடுமாறன் எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தைஅளித்தார். அதில்,
தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக நான் பேசியதாக என்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாட்டின் ஒற்றுமை உண்மையிலேயே கட்டிக் காக்கப்பட வேண்டுமானால் தமிழகம் உள்ளிட்ட அனைத்து இந்தியமாநிலங்களுக்கும் சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். இதற்காகப் புதிய சட்டமும் கொண்டுவரப்படவேண்டும்.
உள்நாட்டு அமைதியைக் கெடுக்கும் விதத்தில் நான் கூட்டத்தில் பேசியதாகவும் என் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும்.
என்னுடைய பேச்சால் தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும், எப்பொழுதும் கலவரமோ, மோதல்களோ ஏற்பட்டதேகிடையாது.
மத்திய, மாநில அரசுகளை குறை கூறி நான் பேசியதாகவும் காவல் துறையினர் என் மீது அபத்தமாகக் குற்றம்சாட்டியுள்ளனர். அரசுகளின் குறைவான செயல்பாடுகளைச் சுட்டிக் காட்டுவது ஜனநாயக உரிமை மற்றும்கடமையாகும்.
இவ்வழக்கு தொடர்பாக கடந்த எட்டு ஆண்டுகளாக நான் தலைமறைவாகியிருந்ததாகவும் போலீசார் பொய்யாகக்குற்றம் சாட்டியுள்ளனர். இந்தக் காலகட்டங்களில் நான் போலீசாரின் அனுமதியுடனேயே பல பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளேன்.
என் மீது தொடரப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் நான் அடியோடு மறுக்கிறேன். உடல் ரீதியாகவும்மன ரீதியாகவும் உளைச்சலைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், தமிழர் தேசிய இயக்கதைஒடுக்குவதற்காகவுமே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளார் நெடுமாறன்.
இதையடுத்து நெடுமாறன் சார்பில் ஆறு சாட்சிகளை விசாரிக்கக் கோரும் மனு நீதிபதி பால்துரையிடம்அளிக்கப்பட்டது. அம்மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜனவரி9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-->


