பாவாணன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மதிமுக மேடைப் பேச்சாளரும் தமிழர் தேசியஇயக்கத்தின் ஆதரவாளருமான பாவாணன் மீது இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட ஒன்பதுமதிமுகவினர் மீது நேற்று பொடா தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டு கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளபுதுக்கோட்டையைச் சேர்ந்த பாவாணனும் நேற்று இந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஆனால் அவர் மீது நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. பாவாணன் சிறையில் அடைக்கப்பட்டு180 நாட்கள் ஆகியும் ஏன் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்யவில்லை என்று அரசு வழக்கறிஞர்ஜெயக்குமாரிடம் நீதிபதி ராஜேந்திரன் கேட்டார்.
பாவாணன் ஜூலை 4ம் தேதி கைது செய்யப்பட்டாலும் 5ம் தேதிதான் ரிமாண்ட் செய்யப்பட்டார். எனவேநாளைதான் (இன்று) 180 நாட்கள் முடிவடைகின்றன. நாளைக்குள் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்கிறோம்என்று ஜெயக்குமார் பதிலளித்தார்.
அதன்படி பாவாணன் இன்று மீண்டும் பொடா தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் மீது க்யூபிரிவு போலீசார் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து பாவாணனை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று அவருடைய வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். ஆனால் இது தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை வரும் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதிராஜேந்திரன்.
முன்னதாக, தான் அடைக்கப்பட்டுள்ள சிறையில் விளக்கு, மின் விசிறி, சுகாதார வசதிகள் இல்லை என்றும்,புத்தகங்கள் படிக்க முடியவில்லை என்றும் நீதிபதியிடம் பாவாணன் புகார் செய்தார்.
இதையடுத்து இந்த வசதிகளை அளிக்கும்படி கோயம்புத்தூர் சிறை அதிகாரிக்கு நீதிபதி ராஜேந்திரன்உத்தரவிட்டார்.
-->


