For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"தீவிரவாதிகள்" வேடத்தில் வந்த போலீசார்

By Staff
Google Oneindia Tamil News

தீவிரவாதிகள் போல நடித்து சக போலீஸ்காரர்களின் உஷார் நிலை குறித்து சோதனை நடத்தியுள்ளனர்கோயம்புத்தூர் போலீசார். ஊரக மாவட்ட எஸ்.பி. இந்த திடீர் சோதனையை நடத்தினார்.

கோயம்புத்தூரில் கடந்த சில நாட்களாக தீவிரவாதிகளின் மிரட்டல்கள் அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் பஸ் டிப்போ ஒன்றில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதே நாளில் கோயம்புத்தூர் பிரஸ் கிளப்பில்டைம் பாம், டெட்டனேட்டர் உள்ளிட்ட வெடிபொருட்கள் அடங்கிய பை ஒன்று கைப்பற்றப்பட்டது.

மேலும் சில பத்திரிக்கை அலுவலகங்களுக்கும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள்வந்தன.

ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவங்களால் கோயம்புத்தூர் நகர மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

இதற்கிடையே கேரளாவிலிருந்து வெடிபொருட்கள் நிரம்பிய ஒரு ஜீப் கோயம்புத்தூரை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் ஒரு சில நாட்களுக்கு முன் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து நள்ளிரவிலேயே அனைத்து போலீஸ் நிலையங்களும் உஷார் நிலைக்கு வந்தன. சாலைகளில் உடனேதடுப்புகளை அமைத்து போலீசார் தீவிர சோதனை நடத்தினர். ஆனால், ஜீப் எதுவும் வரவில்லை.

இருப்பினும் கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் பல சோதனைச் சாவடிகளிலும் போலீசார் வாகன சோதனைநடத்தி வருகின்றனர். ஆனால், சில சோதனை சாவடிகளில் போலீசார் கவனக் குறைவாக இருப்பதாக மாவட்டஊரக எஸ்.பியான தினகரனுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சோதனைச் சாவடி போலீசாருக்கே சோதனைவைக்க எஸ்.பி. முடிவு செய்தார்.

அதன்படி தீவிரவாதிகள் கெட்டப்பில் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களுடன் சில போலீசார் தனியார் டாடாசுமோ கார் ஒன்றில் அனுப்பி வைக்கப்பட்டனர். சோதனை சாவடிகளில் உள்ள லோக்கல் போலீசாருக்குஅடையாளம் தெரியாத ஆயுதப்படைப் பிரிவைச் சேர்ந்த போலீசாரை இப்படி தீவிரவாதிகள் வேடத்தில் அனுப்பிவைத்தார் எஸ்.பி.

இந்தப் போலீசார் டி-சர்ட், லுங்கி, பேண்ட் என மிகச் சாதாரண உடைகளில் "தீவிரவாதிகளாக" கிளம்பினர். போலிநம்பர் பிளேட் மூலம் காரின் பதிவு எண்ணும் கேரள எண் கொண்டதாக மாற்றப்பட்டது.

வாளையார் சோதனை சாவடி வழியாக நேற்று அதிகாலை அந்தக் கார் சென்றது. பின்னர் சிறிது நேரம் கழித்துஅதே சோதனை சாவடி வழியாக அந்தக் கார் திரும்பியபோது கேரளப் பதிவு எண்ணைப் பார்த்து அங்கிருந்தபோலீசார் அதை வழிமறித்து நிறுத்தினர்.

பின்னர் அந்தக் காரை போலீசார் சோதனையிட்டனர். அங்கிருந்த பைகளைத் திறந்து காட்டுமாறும் அவர்கள்கூறினர்.

அப்போது அதில் துப்பாக்கிகள் இருப்பது தெரிய வரவே, அதிர்ந்து போன சோதனை சாவடி போலீஸ்காரர் ஒருவர்உடனே துப்பாக்கி உயர்த்தி அனைவரையும் வெளியே இறங்கச் சொன்னார். தனது சக போலீசாரையும் உடனேதுணைக்கு அழைத்து காரை சுற்றி வளைத்தார்.

இதையடுத்து காரில் வந்தவர்கள் உடனடியாகச் சுதாரித்துக் கொண்டு தாங்களும் போலீசார்தான் என்று கூறிஅடையாள அட்டையைக் காட்டினர். பின்னர் எஸ்.பி. போட்ட திட்டங்களைப் பற்றியும் கூறினர்.

இதையடுத்தே சோதனை சாவடி போலீசார் பெருமூச்சு விட்டபடியே தீவிரவாதி வேஷம் போட்டிருந்தபோலீசாருடன் கை குலுக்கிக் கொண்டனர்.

இதுபோலவே வேலந்தாவளம் சோதனை சாவடியிலும் இதே காரில் சென்ற போலீசார் சோதனை நடத்தினர்.அவர்களும் படு உஷாராகவே இருந்தனர்.

காரில் வெடிபொருட்களைப் பார்த்தும், அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் தன்னிடமிருந்த ரிவால்வரை உருவிக்கொண்டு தாக்குதல் நடத்தத் தயாரானார்.

இதைக் கண்டதும் காரில் இருந்த போலீசார் வெலவெலத்துப் போயினர். உடனடியாகக் கைகள் இரண்டையும்தூக்கிக் கொண்டே "நாங்களும் போலீசார்தான்" என்று அடையாள அட்டைகளைக் காட்டினர்.

மேலும் பல்வேறு சோதனை சாவடிகளிலும் தீவிரவாதி போல வேடமணிந்த மற்ற பல போலீஸ் அணிகளும்சோதனை நடத்தின. ஆனால் அனைத்து சாவடிகளிலுமே போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடனே இருந்ததுதெரியவந்தது.

நேற்று மாலையுடன் இந்தச் சோதனைகள் நிறைவு பெற்றன. அனைத்து சோதனை சாவடிகளிலுமே போலீசார்உஷார் நிலையில் இருப்பதைக் கேள்விப்பட்ட எஸ்.பி. அவர்களைப் பாராட்டினார்.

கேரளாவில் ஒருவர் கைது:

இதற்கிடையே கேரளாவில் சமீபத்தில் தமிழக அரசு பஸ்கள் மீது தாக்குதல்கள் நடந்தது தொடர்பாக மக்கள்குடியரசுக் கட்சித் தலைவர் ஒருவரை அம்மாநில போலீசார் நேற்று கைது செய்தனர்.

ஒரு சில நாட்களுக்கு முன் கோழிக்கோடு பஸ் நிலையத்தில் மதுரைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த தமிழக அரசுபஸ்சுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில் பஸ்சின் பெரும்பாலான பகுதி எரிந்து சாம்பலானது.

அதேபோல் சேலத்திலிருந்து கேரளா சென்று கொண்டிருந்த மற்றொரு தமிழக அரசு பஸ்சையும் ஒரு கும்பல்வழிமறித்துத் தாக்கியது.

இந்தச் சம்பவங்களுக்குக் காரணமாகக் கருதப்படும் மஜித் பரம்பை என்பவர் நேற்று கண்ணூர் அருகே கைதுசெய்யப்பட்டார். கோயம்புத்தூர் தொடர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல்நாசர் மதானியின் மக்கள் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்தான் மஜித் என்பது தெரிய வந்துள்ளது.

கோயம்புத்தூரில் சமீபத்தில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கும் மஜித்துக்கும் தொடர்பு உள்ளதாஎன்பது குறித்து விசாரிக்க, நான்கு கோயம்புத்தூர் போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

󠣰 PQug ٶPlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X