கத்தாரில் இருந்து தப்பி இந்தியா வரும் சகோதரிகள்
கத்தார்:
இன்டர்நெட் மூலம் காதலித்து இந்தியர்களைத் திருமணம் செய்து கொண்டு கர்ப்பமான இரு கத்தார் நாட்டு சகோதரிகளின்உயிரைக் காப்பாற்ற, அவர்களை இந்தியாவுக்கே அனுப்பிவிட ஐ.நா. சபை முடிவு செய்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த முகம்மத் அர்ஷத் என்பரை தபியாவும், மும்பையைச் சேர்ந்த வசீம் கான் எனபரைவை நல்யாவும்காதலித்தனர். இதில் முகம்மத் அர்ஷதும், வசீம் கானும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் வசீம் கான்- தபியா இடையே நெட் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் கான் மூலம் அர்ஷத் அந்த சகோதரிகளுக்குஅறிமுகமாகியுள்ளார். இதில் நல்யாவை அர்ஷத் காதலிக்க ஆரம்பித்துள்ளார்.
இந் நிலையில் இந்த இரு காதல் ஜோடிகளும் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டன. இதையடுத்து வீட்டில் இந்தியாவுக்கு டூர்போவதாக சொல்லிவிட்டு அந்த இரு சகோதரிகளும் கடந்த ஆண்டு ஆகஸ்டில் இந்தியா வந்துள்ளனர்.
மும்பையில் வைத்து இரு ஜோடிகளும் திருணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் சில வாரங்கள் ஜாலியாகச் சுற்றிய அவர்கள்கத்தார் திரும்பினர். சில வாரங்களில் இந்த இரு சகோதரிகளுமே கர்ப்பமாயினர்.
இதையடுத்து தங்களது திருமண விவரத்தை வீட்டில் தெரிவித்துள்ளனர். இதனால் கடுப்படைந்த அந்த இரு சகோதரிகளின்சகோதரர்களும் அவர்களது கர்ப்பத்தைக் கலைக்க முடிவு செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து தப்பிய அந்த இரு சகோதரிகளும் எகிப்து தலைநகர் கெய்ரோவில்போய் இறங்கினர். அங்கு தங்களுக்கு புகலிடமும் பாதுகாப்பும் கேட்டு மனித உரிமை அமைப்புகளிடம் சரணடைந்தனர்.
இவர்களை விரட்டிக் கொண்டு சகோதரர்களும் கெய்ரோ வந்துவிட்டனர்.
இதையடுத்து என்ன செய்வது என்று குழம்பிய எகிப்து அதிகாரிகள் ஐக்கிய நாடுகள் சபையிடம் இந்த விவகாரத்தைக கொண்டுசென்றனர்.
அவர்களை கத்தாருக்குத் திருப்பி அனுப்பினார் கர்ப்பம் கலைக்கப்படுவதோடு, மரண தண்டனை உள்ளிட்ட மிகக் கடுமையானதண்டனைக்கும் உள்ளாவார்கள் என்பதால் இந்தியாவிடமே ஒப்படைக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் வாதாடின.
இதையடுத்து உடனே இந்த இருவரையும் அவர்களது இந்தியக் கணவர்களிடமே ஒப்படைத்துவிடுமாறு ஐ.நா. அதிகாரிகள்யோசனை தெரிவித்தனர்.
இதையடுத்து இன்று அல்லது நாளை இந்த இரு சகோதரிகளும் மும்பைக்கும், பெங்களூருக்கும் அனுப்பப்படுவர் என்றுதெரிகிறது. இதற்கான ஆவணங்கள் தயாரிக்கும் பணியில் ஐ.நா. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
-->


