For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி ஆணையக் கூட்டம் ரத்து: ஆனாலும் நீர் தர கர்நாடகம் ஒப்புதல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பாண்டிச்சேரி முதல்வர் ரெங்கசாமி மற்றும் கேரள முதல்வர் ஏ.கே. அந்தோணி ஆகியோர் கலந்து கொள்ளமுடியாது என்று அறிவித்து விட்டதால், பிரதமர் வாஜ்பாய் தலைமையில் இன்று டெல்லியில் நடக்க இருந்த காவிரிஆணையக் கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.

ஆனால், தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிட கர்நாடக முதல்வர் கிருஷ்ணா முன்வந்துள்ளார்.

அதே நேரத்தில் தமிழகத்துக்கு நஷ்டஈடாக ரூ. 400 கோடியையும், 2 லட்சம் டன் அரிசியையும் மத்திய அரசு தரவேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

அப்போதே சொன்னோம்..

குறைந்தபட்சம் மூன்று முதல்வர்களாவது கலந்து கொண்டால்தான் காவிரி ஆணையக் கூட்டத்தை நடத்த முடியும்.

ஆனால், சோனியாவை ஜெயலலிதா விமர்சித்து வருவதால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 முதல்வர்களும் சேர்ந்துஇக் கூட்டத்தை ஒத்தி வைக்கச் செய்யத் திட்டமிட்டிருப்பதை தட்ஸ்தமிழ்.காம் முதன்முதலில் கூறியது.

அதே போல இன்று கிருஷ்ணா தவிர அந்தோணி மற்றும் ரெங்கசாமி ஆகிய இருவரும் இன்று டெல்லிக்குச்செல்லவில்லை.

கிருஷ்ணா நேற்று காலையே டெல்லி கிளம்பிச் சென்றுவிட்டார். நேற்று மாலை ஜெயலலிதா டெல்லி சென்றார்.தமிழக நிதி அமைச்சர் பொன்னையன், பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர்லட்சுமி பிரானேஷ் மற்றும் பொதுப்பணித் துறை செயலாளர் குற்றாலிங்கம் ஆகியோர் முன்னதாகவே டெல்லிசென்று விட்டனர்.

அவர்களும் அதிமுக எம்.பிக்களும் ஜெயலலிதாவை டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றனர்.

கிருஷ்ணா வந்தார்...

இக் கூட்டத்தில் கிருஷ்ணாவும் கலந்து கொள்ளாவிட்டால் காங்கிரஸ் கட்சி தமிழகத்துக்கு எதிராக சதி செய்வதாகஅதிமுக குற்றம் சாட்டும் என்பதால் இந்தப் பிரச்சனையில் மிக முக்கியவரான கர்நாடக முதல்வரை கூட்டத்தில்கலந்து கொள்ளுமாறு டெல்லி காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுவிட்டது.

தங்களுடன் பவானி ஆற்றுப் பிரச்சனையில் தமிழகம் மோதி வரும் நிலையில் அந்தோணி தனது டெல்லிபயணத்தை தவிர்த்துவிட்டார்.

ரங்கசாமி மூலம் பதிலடி...

ஆனால், பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி தான் கடைசி நேரத்தில் தன்னால் டெல்லி போக முடியாத சூழ்நிலைஉருவானதைப் போல டிராமா போட்டுள்ளார். ஏற்கனவே அவர் டெல்லி செல்வதில்லை என்ற முடிவில் தான்இருந்தார்.

ஆனாலும் நான் நாளை டெல்லி செல்வேன், காவிரி கூட்டத்தில் பங்கேற்பேன் என்று ரங்கசாமி அறிவித்திருந்தார்.இதனால் காவிரிக் கூட்டம் நடக்கும் என்ற நம்பிக்கை வந்தது.

இந் நிலையில் இன்று காலை அவருக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்ட காரணத்தால் தன்னால் டெல்லி வரமுடியவில்லை என முதல்வர் ரங்கசாமி பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம் அனுப்பிவிட்டார். இன்று காலை இக் கடிதம்பிரதமர் அலுவலகத்துக்கு பேக்ஸிசில் வந்து சேர்ந்தது.

இன்றே பாண்டிச்சேரியில் உள்ள அரசு ஜிப்மர் மருத்துவமனைக்குச் சென்று அவர் சிகிச்சையும் பெறுவார் என்றும்தெரிகிறது.

கூட்டம் ரத்து..

இதையடுத்து காவிரி ஆணையக் கூட்டத்தை போதிய கோரம் இல்லாதததால் (குறைந்தபட்சம் 3 முதல்வர்கள்இல்லாததால்) ஒத்தி வைப்பதாக பிரதமர் அலுவலகம் அறிவித்தது. அதே நேரம் ஜெயலலிதாவையும் கிருஷ்ணாவையும்தனித்தனியே சந்தித்துப் பேச வாஜ்பாய் முன் வந்தார். இதை மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அனந்த் குமார்நிருபர்களிடம் தெரிவித்தார்.

அவர் நிருபர்களைச் சந்தித்த சிறிது நேரத்திலேயே முதல்வர் ஜெயலலிதா பிரதமரின் இல்லத்துக்கு வந்தார். அப்போது தமிழகத்தில்விவசாயிகளின் நிலைமை மிக மோசமாக இருப்பதை ஜெயலலிதா விளக்கினார். பிரதமரிடம் ஒரு மனுவையும் வழங்கினார்.அதில் உடனே தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதையடுத்து கிருஷ்ணாவைச் சந்தித்தார் பிரதமர் வாஜ்பாய். தமிழகத்தில் நிலைமை மிக மோசமாக இருப்பதை விளக்கியவாஜ்பாய், நீரைத் திறந்துவிட்டு விவசாயிகளைக் காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டார். தமிழக முதல்வர் வழங்கிய மனுவையும்கிருஷ்ணாவிடம் காட்டிப் பேசினார்.

நீர் தர ஒப்புதல்..

இதையடுத்து நல்லெண்ண அடிப்படையில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட கிருஷ்ணா முன் வந்தார். இத் தகவலை மத்தியநீர் வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சரண் சேத்தி நிருபர்களிடம் தெரிவித்தார். திறந்துவிடப்படும் நீரின் அளவு குறித்து மத்தியநீர்வளத்துறை அதிகாரிகளும் கர்நாடக அதிகாரிகளும் பேசி முடிவு செய்வர். மாலை நீரின் அளவு குறித்து அறிவிக்கப்படும்.

சுமார் 6 டி.எம்.சி. அளவுக்கு நீரை கர்நாடகம் திறந்துவிடும் என்று தெரிகிறது.

கடந்த நவம்பரில் காவிரி ஆணையக் கூட்டம் நடந்தபோது விமான டிக்கெட் எல்லாம் வாங்கிவிட்டு கடைசிநேரத்தில் தனது பயணத்தை உடல் நிலையைக் காரணம் காட்டி ஒத்தி வைத்தார் ஜெயலலிதா. அப்போதுஆண்டனியும் வர முடியாமல் போனதால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

அப்போது கிருஷ்ணாவும் ரங்கசாமியும் போய் டெல்லியில் காத்திருந்து ஏமாற்றமடைந்து ஊர் திரும்பினர்.

இப்போது அதே ஸ்டைலை பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியைவிட்டு நிறைவேற்றி ஜெயலலிதாவுக்கு பதிலடிதந்துள்ளது காங்கிரஸ். ஆனால், அதே நேரத்தில் நல்லெண்ண அடிப்படையில் தமிழகத்துக்குத் தண்ணீர்திறந்துவிடவும் முன் வந்துள்ளார் கிருஷ்ணா.

இதனால் தமிழகத்துக்கும் கர்நாடகத்தும் இடையே நிலவி வந்த சூடு குறையும் என்று தெரிகிறது.

ரூ. 400 கோடி, அரிசி கேட்கும் தமிழகம்..

இதற்கிடையே தமிழகத்துக்கு நஷ்ட ஈடாக ரூ. 400 கோடியும், 2 லட்சம் டன் உணவு தானியத்தையும் மத்திய அரசுவழங்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகம் நீரைத் திறந்துவிட ஒப்புக்கொண்டவுடன் இக் கோரிக்கையை பிரதமரிடம் ஜெயலலிதா வைத்துள்ளார்.

சமீபத்தில் தான் விவசாயிகளுக்கு இலவச உணவுத் திட்டத்தை ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், கஜானாகாலியாகி வற்றிக் கிடக்கும் நிலையில் எங்கிருந்து இத் திடத்தை இவர் நிறைவேற்றுவார் என்ற கவலை அதிகாரிகள்மத்தியில் நிலவி வருகிறது.

இந்தத் திட்டத்துக்காகத் தான் மத்திய அரசிடம் அரிசியையும், பணத்தையும் ஜெயலலிதா கேட்கிறார் என்பதுஉறுதியாகிறது.

சம்பா பயிர்கள் படிப்படியாகக் கருகிக் கொண்டிருப்பதைத் தாங்க முடியாமல் ஏற்கனவே இரண்டு தமிழகவிவசாயிகள் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்துக்கு இந்த ஆண்டில் கர்நாடகம் 23 டி.எம்.சி. நீரை மிச்சம் வைத்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டுக்கு 6டி.எம்.சி. மட்டுமே தர வேண்டி இருப்பதாக கர்நாடகம் கூறுகிறது. இந்த 6 டி.எம்.சியைக் கூட இப்போதைக்குத் தரமுடியாது என்றும் கூறி வந்தது. இப்போது இந்த நீரைத் தர கர்நாடகம் முன் வந்துள்ளது.

நீரைத் தருமாறு மத்திய அரசு ஏதும் உத்தரவிடவில்லை என்றும், தானாகவே நீர் விட கர்நாடகம் முன் வந்ததாகவும்நீர் வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சரண் சேத்தி தெரிவித்தார்.

󠣰 PQug ٶPlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X