For Quick Alerts
For Daily Alerts
Just In
சாத்தான்குளம்: அதிமுக விதிகளை மீறுவதாக காங். புகார்
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் இடைத் தேர்தல் பிரசாரத்தில் அதிமுகவினர் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக காங்கிரஸ்கட்சி புகார் கூறியுள்ளது.
சாத்தான்குளம் தொகுதிக்குட்பட்ட ஆழ்வார் திருநகரி பகுதியில் அரசு பத்திரப் பதிவு அலுவலக சுவர்கள், கோவில்சுவர்களில் அதிமுகவினர் பிரசார விளம்பரத்தை வரைந்து வைத்து, விதிகளை மீறி செயல்படுவதாக காங்கிரஸ்கட்சியினர் புகார் கூறுகின்றனர்.
இது தொடர்பாக தேர்தல் அதிகாரிக்கும், மத்திய தேர்தல் கமிஷனுக்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளதாகவும்காங்கிரஸ் தேர்தல் குழுவினர் தெரிவித்தனர்.
அதிமுகவினரின் தேர்தல் விதிமீறல்களை தொகுதி தேர்தல் அதிகாரி கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் அவர்கள்தெரிவித்துள்ளனர்.


